ஐஜிபி மகள் யாருக்கு ஆயுதங்கள் விற்கிறார்? பிகேஆர் தலைவர் கேட்கிறார்

koyaஅரசாங்கத்துக்கு  சுடும்  ஆயுதங்கள்  சப்ளை  செய்யும்  குத்தகையைப்  பெற்றிராத  போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  மகள்  வேறு  யாருக்கு  அவற்றை  விற்கிறார்?

நேற்றிரவு  கோலாலும்பூரில்  ஒரு  கருத்தரங்கில்  கலந்துகொண்ட   பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்   லத்தீபா  கோயா  இக்கேள்வியை  எழுப்பினார்.

கருத்தரங்குக்கு வந்திருந்த  பார்வையாளர்களில்  ஒருவர்  போலீஸ்காரர்களுக்கு  எதற்காக  துப்பாக்கிகள்  என்று  வினவியதற்குப்  பதிலளித்தபோது லத்தீபா  இக்கேள்வியை  எழுப்பினார்.

“எனக்குத் தெரிந்தவரை,  ஐஜிபி-இன்   மகள்  அவர்களுக்கு  ஆயுதங்களைக்  கொடுக்கவில்லை. ஐஜிபியே  சொல்லியிருக்கிறார்  மகளுக்கு   சுடும்  ஆயுதங்கள்   விற்பனை  செய்ய  உரிமம்  உள்ளபோதும்  அரசாங்கத்துக்கு  சப்ளை  செய்யும்  குத்தகை  அவரிடம்  இல்லை  என்று.

“அவர்  நவீனமான  சுடும்  ஆயுதங்களை  விற்பனை  செய்கிறார். நான்  என்ன  கேட்க  விரும்புகிறேன்  என்றால்,  ஐஜிபி  கூறியுள்ளதுபோல்   அரசாங்கத்துக்கோ   அமலாக்க  அதிகாரிகளுக்கோ   இராணுவத்துக்கோ (சுடும்  ஆயுதங்கள்) சப்ளை  செய்யாவிட்டால்   வேறு  யாருக்கு  விற்கிறீர்கள்”, என  லத்தீபா  வினாவெழுப்பினார்.