உச்ச நீதிமன்றம் 8 ஆண்டுகளாக தாயைப் பிரிந்திருக்கும் மகளைத் தாயாரிடமே ஒப்படைக்குமா?

indiraஓர்  ஆசிரியரான  இந்திரா  காந்தி தம்  மகளைப்  பார்த்து  எட்டு  ஆண்டுகள்  ஆகின்றன. அவரின்  கணவர் கே.பத்மநாதன் (இப்போது  முகம்மட்  ரிதுவான்  அப்துல்லா)  இஸ்லாத்துக்கு  மதமாறியபோது  அவர்களின்   11-மாத  மகளையும்  எடுத்துச்  சென்று  விட்டார்.

மகளைத் தம்மிடம்  கொண்டு  வந்து  ஒப்படைக்க  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காருக்கு  உத்தரவிட   வேண்டும்  என்று  கோரி  எட்டு  மாதங்களுக்குமுன்  இந்திரா  காந்தி  நீதிமன்றத்தில்  வழக்கு  தொடுத்தார்.

2014-இல்,  ஈப்போ  உயர்  நீதிமன்றம்  ரிதுவானைக்  கண்டுபிடித்து  கைது  செய்து  இந்திரா  காந்தியின்  இளைய  மகளை  அவரிடமே  ஒப்படைக்க  வேண்டும்  என காலிட்டுக்கு  உத்தரவிட்டது.

போலீஸ்  தலைவர்   மேல்  முறையீடு  செய்தார்.

மூன்று  மாதம்  கழித்து  முறையீட்டு  நீதிமன்றம்  உயர்  நீதிமன்றத்   தீர்ப்பைத்  தள்ளுபடி  செய்தது.

அதன் பின்னர்  இந்திரா  காந்தி   வழக்கை  உச்ச  நீதிமன்றத்துக்குக்  கொண்டு  சென்றார்.

அங்கு  ஐந்து  நீதிபதிகள்  குழு  விசாரணை  நடத்தியது.  நாளை  அது  தீர்ப்பு  வழங்கும்.