பாஸ்: தீவிரவாதிகள் என்றால் குண்டுகளைக் கையில் எடுத்திருப்போம்

pujசரவாக்  தேர்தல்  சரவாக்கின்  வட  பகுதியில்  போட்டியிடும்  பாஸ்  வேட்பாளர்கள்  பாஸ்  ‘தீவிரவாதக் கட்சி’  என்று  கூறப்படுவதைச்  சாடியுள்ளனர்.

“தீவிரவாதிகளாக  இருந்தால்  மாநிலத்  தேர்தலில்  போட்டி போட்டுக்  கொண்டிருக்க  மாட்டோம். குண்டுகளை  வெடித்துக்  கொண்டிருப்போம்”, என  புஜுட்  தொகுதியில்  களமிறங்கும்  ஜொப்ரி  ஜராயி  கூறினார்.