சம்பள உயர்வு வழங்காது போனால் சட்டநடவடிக்கை!

tea12016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையின்படி தனியார் துறையினருக்கான 2500 ரூபாசம்பள உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.இல்லையேல் பெருந்தோட்டத்துறை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்என்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பின் போது எச்சரித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு உடன்படிக்கையின் மூலம் இரண்டுவருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்;டு வருகிறது.

இந்தநிலையில் 2015ம் ஆண்டில் இந்த உடன்படிக்கை செய்யப்படவில்லை.இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படாமையே இதற்கான காரணமாகும்.

எனவே வரவு செலவுத் திட்ட யோசனைப்படி நாளொன்றுக்கு 100 ரூபா என்ற அடிப்படையில் 2500ரூபா சம்பள அதிகரிப்பை பெருந்தோட்டத்துறை உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்குவழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் 2500 ரூபா சம்பள உயர்வு கிடைக்காதவர்கள், தொழில் ஆணையாளரிடம்முறைப்பாட்டை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: