தொகுதிப் பங்கீடு சர்ச்சை குறித்து தேர்தலுக்குப் பின்னர் ஹராபான் விவாதிக்கும்

harapanசரவாக்  தேர்தலில்  சரவாக்  டிஏபிக்கும்  சரவாக்  பிகேஆருக்குமிடையில்  தொகுதி  தொடர்பில்  மூண்ட  சர்ச்சை  குறித்து  மே  ஏழு  தேர்தலுக்குப்  பின்னர்  பக்கத்தான்  ஹராபான்  விவாதிக்கும்  என  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

அது  ஒரு  முக்கியமான விவகாரம்.  அதை  பக்கத்தான்  ஹராபான்  கூட்டத்தில்  வைத்து  விவாதிப்பது  அவசியம்  என்றாரவர்.

“ஏப்ரல் 7-இல் பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியும்  நானும்தான்  தொகுதி  ஒதுக்கீட்டு  உடன்பாட்டில்  கையொப்பமிட்டோம்.

“அப்படி  இருக்க  உடன்பாட்டை  மீறிச்  செல்லக்  கூடாது.

“உடன்பாட்டில்  கையெழுத்திட்ட  பின்னர்  பேச்சுவார்த்தை  இன்னும்  முடியவில்லை  என்று  கூற  முடியாது.

“மாநிலத்  தேர்தல்  முடிந்த  பின்னர்  இதற்குத் தீர்வு  காண்பது  அவசியம்”, என்று  லிம்  அழுத்தமாகக்  குறிப்பிட்டார்.

இரண்டு  கட்சிகளும்  செய்துகொண்ட  உடன்பாட்டை  மீறிவிட்டதாகச்  சொல்லப்படுவதை  அஸ்மின்  மீண்டும்  மறுத்தார்.

சர்ச்சைக்குள்ளான  ஐந்து  தொகுதிகள்  உள்பட  எட்டு  மாநிலத்  தொகுதிகளை  டிஏபி-இடம்  ஒப்படைப்பதாகக் கொள்கை  அளவில் மட்டுமே  ஒப்புக்கொண்டதாகவும்  அது தொடர்பாக  வாக்குறுதி  எதுவும்  கொடுக்கவில்லை  என்றும்  ஒப்பந்தத்தில்  கையெழுத்திடவில்லை  என்றும்  கூறினார்.