சூடு பிடிக்கிறது டிஏபி-இன் தேர்தல் பரப்புரை

campaignசரவாக்  தேர்தலில்   டிஏபியின்  தேர்தல்  பரப்புரை  சூடு  பிடிக்கத்  தொடங்கியுள்ளது.  சனிக்கிழமை,  கூச்சிங்,  சிபு,  மீரி  ஆகிய  இடங்களில்  நடைபெற்ற  ‘செராமா’க்களுக்கு  ஆறாயிரத்துக்கும்  மேற்பட்டோர்  திரண்டு  வந்தனர்.

எதிரணி  தேர்தல்  பரப்புரை  முதல்  ஐந்து  நாள்களுக்கு  மந்தமாகமாகவே இருந்து  வந்த  நிலையில்  நேற்று  தேர்தல்  கூட்டங்களுக்கு  மக்கள்  திரண்டு  வந்திருந்தது  ஊக்கமளிப்பதாக  இருந்தது.

கூச்சிங்  செராமாவுக்கு  2,300  பேர்  வந்திருந்தனர்.  சிபுவிலும்  மீரியிலும்   முறையே  2,500,  2,000.

வெள்ளிக்கிழமை  கூச்சிங்  ஜாலான்  துன்  ஜுகா  செராமாவில்    பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கலந்துகொண்ட  செராமாவுக்கு  ஈராயிரத்துக்கும்  மேற்பட்டோர் வந்திருந்தனர்.

ஜாலான்  துன்  ஜுகா செல்லும்   சாலைகள்  லிம்மைப்  பார்ப்பதற்காக  வந்த  மக்கள்  கூட்டத்தால்  நிரம்பி  இருந்தன.

கூட்டத்தில்  பேசிய  லிம்,  1எம்டிபி  மோசடியைக்  கடுமையாகச்  சாடினார். அது  பட்ட  கடன்களை  மக்கள்  கொடுக்க  வேண்டியிருப்பதாகக்  கூறினார்.

“எப்படியோ  இருக்க  வேண்டியது  சரவாக்.  உங்களிடம்  அளவில்லா  வளம்  இருக்கிறது. ஆனாலும்,  பலர்  வறுமையில்  வாடுகிறார்கள்”,  என்றாரவர்.

சரவாக்கில்  அடுத்த  சனிக்கிழமை  தேர்தல்.  1.14 மில்லியன் சரவாக்கியர்கள்  அதில்  வாக்களிப்பார்கள்.