ரிதுவானுக்குப் போலீஸ் வலைவீச்சு

absமுஸ்லிமாக  மதமாறிய  முகம்மட்  ரிதுவான்  அப்துல்லாவைப்  போலீசார்  தேடுகிறார்கள். ஆனால்,  அவர்  இருக்கும்  இடம்  தெரியவில்லை.

ரிதுவான்  செல்லக்கூடிய  இடங்களில்  எல்லாம்  போலீசார்  தேடிப்  பார்த்து  விட்டார்கள். ரிதுவானின்  குடும்ப  உறுப்பினர்கள்,  நண்பர்களையும்  விசாரித்து விட்டனர். அவர்  இருக்கும்  இடம்  யாருக்கும்  தெரியவில்லை  என  ஈப்போ  போலீஸ்  தலைவர்  சம்  சாங்  கியோங்  தெரிவித்தார்.

“எல்லாரையும்  கேட்டுப்  பார்த்தோம். யாருக்கும்  தெரியவில்லை. இதற்கு (உச்ச நீதிமன்றத்  தீர்ப்புக்கு)  முன்பே  அவரைக் கண்டுபிடிக்க  முயன்றோம். முடியவில்லை”, என  சம்  கூறியதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்தது.

ரிதுவான்  ஈப்போவில்  வைத்திருந்த  வழக்குரைஞரை  மாற்றி  விட்டதாகவும்   ஈப்போ  போலீஸ்  தலைவர்  சொன்னார்.  வழக்கு உச்ச  நீதிமன்றம்  சென்றபோது  புதிய  வழக்குரைஞரை  அமர்த்திக்  கொண்டார்.  ரிதுவானின்  இப்போதைய  வழக்குரைஞரின் தொலைபேசி  எண்  போலீசிடம் இல்லை.

“இந்திரா  காந்தியின்  வழக்குரைஞர்  எம்.குலசேகரனுக்கு  அந்த  வழக்குரைஞரைத்  தெரிந்திருக்கலாம்.  அவர்  அந்த  எண்ணைப்  போலீசுக்குக்  கொடுத்து  உதவலாம்.

“என்னுடைய  அதிகாரம்  ஈப்போவில்  மட்டும்தான்”, என  சம்  குறிப்பிட்டார்.