பணத்துக்காக உரிமையை விற்று விடாதீர்கள்: வாக்காளர்களிடம் நஜிப் வலியுறுத்து

moneyவாக்குகள்  தங்களின்  உரிமைகள்.   எதிர்காலத்தைத்  தீர்மானிக்கும்  அரிய  செல்வங்களான  அவற்றை  வாக்காளர்கள் பணத்துக்காக  விற்றுவிடக்  கூடாது   எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

வாக்கு  என்ற  உரிமையைக்  கொண்டு  மக்கள்  தங்கள்  பகுதிகளுக்கு  மேம்பாட்டைக்  கொண்டு  வரக்கூடிய  சரியான  வேட்பாளர்களைத்  தீர்மானிக்க  முடியும். அவற்றைத்  தவறான  பேர்வழிகளிடம் ‘விற்று’  ஏமாந்து  போகக்  கூடாது  என்றாரவர்.

“அவர்கள்(வாக்காளர்கள்)  தத்தம்  பகுதிகளின்  நீண்டகால  மேம்பாட்டை  எண்ணிப்  பார்க்க  வேண்டும் குறுகிய-கால  ஆதாயத்துக்காக  வாக்குகளை  விற்கக்  கூடாது”. ஸ்ரீஅமானுக்கு  40கிமீ  தொலைவில் உண்டோப்பில்  உள்ள  ஒரு  இபான்  கிராமத்தில்  பேசியபோது  நஜிப்  இவ்வாறு  கூறினார்.