டிஏபி-யைக் காப்பாற்றுங்கள்: வாக்காளர்களுக்கு கிட் சியாங் எஸ்ஓஎஸ்

limkitசரவாக்கைக்  காப்பாற்ற  டிஏபி-யைக்  காப்பீர்  என  வாக்காளர்களிடம்   கரம்  நீட்டி  உதவிகேட்டிருக்கிறார்  லிம்  கிட்  சியாங்.

சரவாக்  முதலமைச்சர்  அடினான்  சாதேமும்   மாநில  பிஎன்னும்  டிஏபியின்  பலத்தைக்  குறைப்பதற்கு  வெகுவாக  முயன்று  வருகிறார்கள்  என  லிம்  எச்சரித்தார். அவர்களின்  முயற்சி  வெற்றி  பெறுமோ  என்ற  அச்சம்  தோன்றியுள்ளது.

முந்தைய  தேர்தலில்  டிஏபி  15 இடங்களில்  போட்டியிட்டு 12  இடங்களைக்  கைப்பற்றியது. இப்போது  31  தொகுதிகளில்  களமிறங்கியுள்ளது.   பார்வையாளர்கள்  இது  அகல  கால்  வைக்கும்   முயற்சி  என்று  அபாய  அறிவிப்பை  எழுப்பியுள்ளனர்.

அதன்  அபாயத்தை  டிஏபி  அறிந்தே  உள்ளது  என்று  கிட்  சியாங்  கூறினார்.  ஆனாலும், அது  சீனர்களின்  கட்சி  என்ற  தோற்றத்தை  உடைத்தெறிய  விரும்புகிறது  டிஏபி.  மேலும்,  தீவகற்பத்துக்  கட்சியாக  அடங்கி  ஒடுங்கி  இருக்கவும்  அது  விரும்பவில்லை  என்றாரவர்.

“அகலக்  கால்  வைத்து  விட்டதாக  ஆய்வாளர்கள்  நினைக்கிறார்கள்.  மாநிலம்  முழுவதும்  டாயாக்  பகுதிகளில்  பரப்புரை  செய்து  இருக்கும்  வளங்களை  விரயமாக்காமல்  ஐந்தாண்டுகளுக்குமுன்  வெற்றிபெற்ற  12  இடங்களையும்  தக்கவைத்துக்கொள்ளும்  முயற்சியில்  ஈடுபட  வேண்டும்  என்பது  அவர்களின்  நினைப்பு.

“சரவாக்  டிஏபி  ஆபத்தான  வியூகத்தைதான்  கையிலெடுத்துக்  கொண்டிருக்கிறது……என்றாலும்  அதுதான்  சரியான  முடிவு.  ஏனென்றால்  டிஏபி  இன,  சமய,  வட்டார  வேறுபாடின்றி  எல்லா  மலேசியர்களையும்  பிரதிபலிக்கும்  விரும்பும்   கொள்கையுள்ள  அரசியல்  கட்சியாகும்”,  என்று லிம்  குறிப்பிட்டார்.