தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி

heat-waveஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அனல் காற்று வீச்சால் திருப்பதி காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. திருப்பதி மலையில் நாராயணகிரி மலையில் கடும் வெயிலின் வெப்பம் காரணமாக மரங்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று மற்ற மரங்கள், செடி, கொடிகளில் பரவியது. இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அனல் காற்றால் தீ வேகமாக பரவியது. இதனால் தீயை அணைக்க கடுமையாக போராடினர். ஒரு வழியாக காட்டுத்தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து நாசமானது.

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் வெயிலுக்கு 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதே போல் ஆந்திராவில் ஒரே நாளில் 32 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் சில இடங்களில் மழை பெய்தது. அதிபாபாத் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. அங்கு 63 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தெலுங்கானா மாநில கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல் ஆந்திரா மாநிலத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

-http://www.maalaimalar.com

TAGS: