‘பில்லியன் ரிங்கிட்’ உதவி பற்றிக் கருத்துரைக்க இசி மறுப்பு

hashimecசரவாக்  தேர்தல்  பரப்புரைகளில்  நிதி  ஒதுக்கீடுகள்  பற்றி பாரிசான்  அரசாங்கம்  அறிவிப்பது  குறித்து  கருத்துரைக்க  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  முகம்மட்  ஹாஷிம்  மறுத்தார்.

சரவாக்  பிஎன் தேர்தலில்  நல்ல  வெற்றியைப்  பெற்றால்  அம்மாநிலத்தின்  மேம்பாட்டுக்கு  பில்லியன்  கணக்கான  ரிங்கிட்டை  வழங்குவதாக  பிரதமர்  நஜிப்  ரசாக்  வாக்குறுதி  அளித்தது   தேர்தல்  விதிகளை  மீறுவதாகாதா  என்று  வினவியதற்கு,  “அது  பற்றிக்  கருத்துரைக்க  இயலாது”,  என்று  கூறினார்.

“தேர்தல்  பரப்புரை  காலத்தில்  தேர்தல்  சீராக  நடப்பதை  உறுதிப்படுத்துவதான்  ஆணையத்தின்  கடமை.  வாக்குச்சீட்டுகள்,  குடைகள்  போதுமான  அளவில்  உள்ளனவா  என்பதையெல்லாம்  கவனித்துக்  கொண்டிருக்கிறோம்”,  என  ஹாஷிம்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“இசி  தேர்தல்  பரப்புரைகளில்  சம்பந்தப்பட்டால்  பிறகு  அது  இசியாக  இருக்காது.

“வாக்காளர்கள்  யாரை  ஆதரித்தாலும்  வாக்களிக்க  திரண்டு  வர  வேண்டும்.  அரசியல்வாதிகளின்  வாக்குறுதிகளை  ஏற்பதா,  விலக்குவதா  என்பதை  அவர்கள்தாம்  தீர்மானிக்க  வேண்டும்”, என்றாரவர்.