காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன

heliநேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரின்  உடைந்த  பாகங்கள்  கண்டெடுக்கப்பட்டிருப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  அறிவித்தார்.

ஹெலிகாப்டரின்  உடல்பகுதி, இருக்கைகள்,  ஒரு  கதவு  முதலியவை  கிடைத்துள்ளன.

கூச்சிங்கில்  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  அலுவலகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  நஜிப்  இதைத்  தெரிவித்தார்.

ஹெலிகாப்டரில்  பயணம் செய்தவர்களில் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணையமைச்சர் நோரியா காஸ்னோனும்  அவரின் கணவர் அஸ்முனி அப்துல்லாவும்  இருந்ததாக  நேற்றிரவு  அறிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற  பயணிகள், கோலா  கங்சார் எம்பி  வான்   முகம்மட்  கைரில்  அனுவார்  வான்  அஹ்மட்,   தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சின்  தலைமைச் செயலாளர்  சுந்தரம் அண்ணாமலை,  ஒரு மெய்க்காப்பாளரான  அகமட் சோப்ரி ஆகியோராவர்.