ஹுசாம் பாஸிலிருந்து கட்சிநீக்கம்

husamபாஸ்,  அதன்   முன்னாள்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா விதிமுறைகளை  மீறி நடந்துகொண்டதற்காகக்  கட்சியிலிருந்து  விலக்கப்படுவதாக   இன்று  அறிவித்தது.

ஹுசாம்   விவகாரத்தைப்  பல  கோணங்களில்  ஆராய்ந்தும் கட்சி  நலன்  கருதியும்  ஹுசாமின்  நடவடிக்கைகளின்  விளைவுகளைக்  கருத்தில் கொண்டும்  ஒழுங்கு நடவடிக்கைக்  குழு  அவரை  விலக்குவது  என்ற  முடிவுக்கு  வந்தது.

ஏப்ரல்  23-இல்  கூடிய  ஒழுங்கு  நடவடிக்கைக்  குழு,  ஹுசாமின்  செயல்கள்  கட்சி  விதிமுறைகளை  மீறுவதாக முடிவு  செய்தது.

“எனவேதான்  ஹுசாமை  நீக்குவது  என்று  ஏகமனதாக  தீர்மானிக்கப்பட்டது”, என  அக்குழுவின்  தலைவர்  டாக்டர்  சனுசி  டயிங்  மர்யோக்  கூறினார்.