கிட் சியாங்: ரிம2.6 பில்லியன் தொடர்பாக பிரதமர் பேங்க் நெகாரா ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும்

Siangபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  2013-இல்  ரிம2.6 பில்லியன்  நன்கொடையைப்  பெற்றுக்கொள்ள  முன்னாள்  பேங்க்  நெகாரா  ஆளுனர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  அவருக்கு அனுமதி  அளித்திருந்தார்  என்று  சிறப்பு  விவகாரத்  துறை (ஜாசா)  இயக்குனர்  முகம்மட்  புவாட்  ஸர்காஷி  கூறியிருப்பதை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  நம்பத்  தயாராக  இல்லை.

விசயம்  இவ்வளவு  தெளிவாக  இருக்குமானால் நஜிப்  தாமே  முன்வந்து  இதைத்  தெரிவிக்காதது  ஏன்  என  கேளாங்  பாத்தா  எம்பி  கேள்வி  எழுப்பினார்.

“நஜிப்  தம்  சொந்த  வங்கிக்  கணக்கில்  ரிம2.6  பில்லியனை  வரவு  வைக்க  அனுமதிக்கும்  பேங்க்  நெகாரா  ஆவணங்களை  வைத்திருந்தால், கடந்த  11  மாதங்களில்   அதை  வெளியில்  காண்பிக்காதது   ஏன்?

“ரிம2.6 பில்லியன்  சவூதி  மன்னரிடமிருந்து   வந்திருந்தால்  அதை  நிரூபிக்கும்  ஆவணங்களைக்  காண்பிக்காதது  ஏன்?

“நஜிப்  இப்போது  அவற்றைக்  காண்பிக்க  முடியுமா?”,  என்று  லிம்  இன்று  ஓர்  அறிக்கையில்  வினவினார்.