காலிட்: இடைத் தேர்தல் வேட்பாளர்கள் அமனாவின் பிரதிநிதிகளாக இருப்பதற்கு பிகேஆர் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது

 

Khalidsamat1எதிர்வரும் இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளிலும் பாஸ் அதன் வேட்பாளர்களை நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், அமனா அதன் வேட்பாளர்களை களமிறக்குவதற்கு பிகேஆர் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று பார்டி அமனா நெகாரா (அமனா)வின் தொடர்புத்துறை இயக்குனர் காலிட் சாமாட் கூறுகிறார்.

சுங்கை புசார் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பாஸ் விலக்கொள்ளுமானால் பிகேஆர் அங்கு போட்டியிடும் என்பதுதான் எடுக்கப்பட்ட முடிவு. பாஸ் விட்டுக்கொடுக்க மறுத்து விட்டதால், அமனாதான் அங்கு போட்டியிடும் என்று காலிட் ,மேலும் கூறினார்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல்லா ஹாடி அவாங் இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால், ஒரு முக்கோண போட்டியில் பாஸ் மற்றும் பின் ஆகியவற்றை அமனா எதிர்த்து நிற்பதை தாம் எதிர்பார்ப்பதாக காலிட் கூறினார்.

எது எப்படி இருப்பினும், இத்தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதி மட்டுமே போட்டியிடுவார் என்று அவர் உறுதியளித்தார்.