கடிதக் கசிவால் அன்வாரின் வெளியுலகத் தொடர்பு முடக்கம்

clampஅன்வார்  இப்ராகிம்  எழுதிய  கடிதமொன்று  வெளியானதை  அடுத்து  அவரது  வெளியுலகத்  தொடர்புகள்  முடக்கிப்போடப்பட்டிருப்பதாக  அவரின்  மகளும்  பிகேஆர்  உதவித்  தலைவருமான  நுரூல்  இஸ்ஸா  அன்வார்  கூறினார்.

கடிதம்  கசிந்ததை  அடுத்து  குடும்பத்தினர்கூட  அவரைச்  சந்திப்பதற்குச்  சிரமப்படுவதாக  அவர்  சொன்னார்.

“வழக்குரைஞர்களும்  அவரைச்  சந்திக்க  சிரமப்படுகிறார்கள்.  தந்தைச்  சந்தித்து  அவரிடம்  ஆவணங்களில்  கையெழுத்து  வாங்கவும்  அவரிடம்  ஆணைகள்,  அறிவுறுத்தல்கள் பெறவும்  வாரத்துக்கு  ஒரு  மணி  நேரம்தான்  அவர்களுக்கு  அவகாசம்  வழங்கப்படுகிறது”,  என  நூருல்  இஸ்ஸா  தெரிவித்தார்.

அவர்  கடிதம்  அனுப்பிய  விவகாரம்  வெளியில்  தெரிந்த   பின்னர்  சிறைத்துறையும்  உள்ளுக்குள்  அது  பற்றி  விசாரணை  நடத்தியுள்ளது.

இப்போது  அன்வார்  சிறையை  விட்டு  வெளியேறும்போதெல்லாம்   உடல் பரிசோதனை  செய்யப்படுவதாக  அவருக்கு  நெருக்கமான  வட்டாரமொன்று  கூறியது.