1985இலிருந்து புரோட்டோனுக்கு அளிக்கப்பட்ட உதவி ரிம13.9 பில்லியன்

mustaஅரசாங்கம்  தேசிய  கார்  உற்பத்தி  நிறுவனமான  புரோட்டோன்  1985-இல்  தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து  இதுவரை  ரிம13.9 பில்லியன்  மதிப்புள்ள  உதவிகளை  வழங்கியுள்ளதாக  அனைத்துலக  வர்த்தக,  தொழில்  அமைச்சர்  முஸ்தபா  முகம்மட்  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

உதவி  என்பதில்  அரசாங்க  மான்யங்கள்,  வரி விலக்குகள்,  நிதி-அல்லாத  உதவிகள் ஆகியவை  அடங்கும்  என  தியோ  கொக்  சியோங்(டிஏபி- ராசா)-கின்  கேள்விக்கு  மறுமொழி  அளித்தபோது  அமைச்சர்  கூறினார்.

“போட்டிமிக்க  தொழிலில்  அந்நிறுவனம்  போட்டியிடும்  வல்லமையுடன் விளங்க  வேண்டும்  என்பதற்காக  உதவிகள்  வழங்கப்பட்டன”, என  முஸ்தபா   கூறினார்.