இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! திட்டமிட்டு அழிக்கப்படும் தொல்பொருட்கள்

yogeswaranவடக்கு கிழக்கு பகுதிகளின் தமிழர்களின் பூர்வீக நிலம் என்பதை மறைப்பதற்காக பல தொல்பொருள்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட உழவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

நாகர்கள் இங்கு வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் இந்தப் பகுதியின் பூர்வீகக் குடிகள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளின் தமிழர்களின் பூர்வீக நிலம் என்பதை மறைப்பதற்காக பல தொல்பொருள்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் நிலையங்களுக்கு கூட எடுத்துச் செல்லப்பட்ட பிராமிய எழுத்துக்கள் இன்றுவரை மறைக்கப்பட்டிருக்கின்றது. 150க்கு மேல் தொல்பொருள் தமிழ் பிராமிய எழுத்துக்கள் வாசிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

ஏன் என்றால் தமிழர்கள் இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதை பிராமிய எழுத்துக்கள் நிரூபித்து விடும் என்பதனைக் காட்டுகின்றது.

நாகர் குலத்திற்கு தனிச் சிறப்பு இருந்தது. புத்த பகவான் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வரும் போது நாகர் குலத்தை சேர்ந்த குலோதரன் மகோதரன் என்ற இருவரும் மாணிக்க ஆசனத்திற்காக சண்டையிட்டார்கள். இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அவர் வந்தார் என்று மகாவம்சம் கூறுகின்றது.

அவ்வாறு இருந்தால் இந்த நாட்டிலே சிங்கள இனம் வருவதற்கு முன் தமிழினம் பூர்வீக குடியாக வாழ்ந்திருக்கின்றது என மகாவம்சம் கூறுகின்றது.

நாகர்களின் வாழ்க்கைக்கான அடையாளங்கள் வந்தாறுமூலையிலும் தேங்கிக் கிடக்கின்றது. அதனை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உங்களுக்கும் உண்டு என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: