அபிம்: ஹுடுட் சட்டம் குறித்து முஸ்லிம்-அல்லாதார் உள்பட, எல்லாருடனும் ஆழமாகக் விவாதிப்பீர்

abimபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  முன்வைத்துள்ள  ‘ஹுடுட்  சட்டம்’  குறித்து  ஆழமாக  விவாதிக்க  வேண்டியுள்ளது  என்று  அங்காதான்  பீலியா  இஸ்மாம்(அபிம்)  கூறியுள்ளது.  அவ்விவாதங்களில்  முஸ்லிம்- அல்லாதாரையும்  சேர்த்துக்  கொள்ள  வேண்டும்.

“இத்தீர்மானம் அடுத்த நாடாளூமன்றக்  கூட்டத்தில்  முழுமையாக  விவாதிக்கப்பட  வேண்டும்  என்று  அபிம் விரும்புகிறது”,  என  அபிம்  தலைவர்  ரயிமி   அப்  ரஹிம்  கூறினார்.

இதில்  அக்கறை கொண்ட   அரசியல்  கட்சிகள்,  சமூக  அமைப்புகள்,  முஸ்லிம்- அல்லாதார் ஆகிய  அனைவருடனும்  உண்மையான  கலந்துரையாடல்  நடத்தப்பட  வேண்டும்.

இஸ்லாம்  முஸ்லிம்கள்  அனைவருக்கும்  சொந்தமானது,,  காலத்துக்குக்  காலம்  மாறிக்  கொண்டிருக்கும்  கொள்கைகளைக்  கொண்ட  குறிப்பிட்ட  கட்சிகளுக்கு   மட்டுமே  உரியது  அல்ல  என்றாரவர்.