ஹாடி:மசீசவும் மஇகாவும் டிஏபி-யை விட ‘ஹுடுட் சட்டவரைவு’ பற்றி அதிகம் புரிந்து வைத்துள்ளன

hudபாஸ்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,  வியாழக்கிழமை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்ட  தனிப்பட்ட  உறுப்பினர்  சட்டவரைவு  குறித்து  பிஎன்  பங்காளிக்கட்சிகளான   மசீசவும்  மஇகாவும்  தம்  முன்னாள்  பங்காளிக்  கட்சியான  டிஏபி-யை விட  அதிகம்  தெரிந்து  வைத்துள்ளன  என்றார்.

பக்கத்தான்  ரக்யாட்  கூட்டணியில்  இருந்தபோதே  அது  பற்றி  டிஏபியுடன்  விவாதித்திருப்பதாகவும்  இருந்தும்  அது  புரிந்து  கொள்ளாதிருக்கிறதே  என்றவர்  வருத்தப்பட்டார்.

“1993-இலேயே  டிஏபி-யுடன்  பேச்சு  நடத்தினோம்.

“முறைப்படி  பார்த்தால்  இவ்விவகாரத்தில் (ஹுடுட்டில்)  முஸ்லிம்-அல்லாதார்  சம்பந்தப்படக்  கூடாது.  மசீசவுக்கும்  மஇகாவுக்கும்  புரிந்துள்ளது.  ஆனால், டிஏபிக்குப்  புரியவில்லை”, என  ஹாடி  ஏமாற்றம்  தெரிந்தார்.

ஹாடி  இப்படிக்  கூறுகிறார். ஆனால்,  நேற்று  மசீசவும்  மஇகாவும்  மற்ற  பிஎன்  பங்காளிக்கட்சிகளுடன்  சேர்ந்து  அச்சட்டவரைவுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கக்  கூட்டுச்  செய்தியாளர்  கூட்டமொன்றை  நடத்தின.