ஹூடுட் மசோதா நிறைவேற்றப்பட்டால், லியோவும் மாவும் அமைச்சர் பதவிகளைத் துறப்பர்

Hududmcachieftoresignநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஹூடுட் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், மசீச தலைவர் லியோவ் தியோங் லாயும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கும் தங்களுடைய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

பாரிசான் கூட்டணியின் பங்காளிகளைக் கலந்தாலோசிக்காமல் பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அரசாங்கம் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

லியோவ் போகுவரத்து அமைச்சராகவும் மா பிரதமர் துறை அமைச்சராகவும் இருக்கின்றனர்.

“நான் இதை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறேன். நான் இதர பாரிசான் பங்காளிக் கட்சிகளையும் சேர்த்து இதனை நிறுத்த முயற்சிக்கிறேன்.

“இந்த மசோதாவை நிறுத்துவதற்கு அரசியல் களத்தின் இதர தரப்பையும் ஒன்றிணையுமாறு வலியுறுத்துகிறேன்.

“இதை நாம் செய்ய முடியவில்லை என்றால், நாம் தியாகம் செய்தாக வேண்டும். நான் ராஜினாமா செய்வேன்.

தாம் தொடர்ந்து இருப்பதில் பயன் ஏதுமில்லை என்று கூறிய லியோவ், “நான் இதில் மிக உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறியதாக த ஸ்டார் தெரிவிக்கிறது.

கெராக்கான் தலைவர் மா இந்த மசோதாவை நிறுத்துவதற்கு கெராக்கான் அதனால் இயன்ற அனைத்தையும், அரசாங்கப் பதவிகளைத் துறப்பது உட்பட, செய்யும் என்றார்.

“ஜூலை 5, 2014 மற்றும் அக்டோபர் 14, 2015 இல் நடைபெற்ற ஊடக நேர்காணல்களில் நாடாளுமன்றத்தில் இந்த ஹூடுட் மசோதா நிறைவேற்றப்படுமானால், நான் பதவிலியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளேன்.

“அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை”, என்று மா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.