‘தீனி போடுவதாக’ இழித்துரைப்போரைப் பிரதமர் சாடினார்

makanஅரசியலில்  பின்னடைவு  ஏற்பட்டதை  அடுத்து  இழித்தும்  பழித்தும்  பேசுவோரைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சாடினார்.

அரசாங்க  உதவி   பெறுவோரை “pemakan dedak (விலங்குகளுக்கான  தீனியைத்  தின்பவர்)”  என்று  வருணித்து  கொடுக்கப்படும்  உதவியைக்  கெடுக்கப்  பார்க்கிறார்கள்  என்றாரவர்.

பிரதமர்  பெயர்களைக்  குறிப்பிடவில்லை. ஆனாலும்,  தம்  முன்னாள்  அரசியல்  குருவும்  இந்நாள்  அரசியல்  எதிரியுமான  டாக்டர்  மகாதிர்  முகமட்டை  மனதில்  வைத்துத்தான்  அவர்  அவ்வாறு  கூறி  இருக்க  வேண்டும்.

“இந்தப்  புனிதமான  மாதத்தில்  சில  தரப்பினர்  நயமற்றுப்  பேசுகிறார்கள்.

“அரசாங்கம்  மக்களின்  துயர்  தீர்க்கவே  உதவிகளை  வழங்குகிறது.  ஆனால், அது  தீனி  போடுவதாகக்  கொச்சைப்படுத்தப்  படுகிறது”, என  நஜிப்  தம்  முகநூல்  பக்கத்தில்  கூறினார்.