‘அஸ்மின் முகாம்’, ‘ரபிசி முகாம்’ என்பதெல்லாம் பிகேஆரில் இல்லை

campபிகேஆர்  துணைத்  தலைவர்   அஸ்மின்  அலி,  கட்சியில்  தம்  ஆதரவாளர்கள்  ரபிசியின்  ஆதரவாளர்கள்  என  இரண்டு   பிரிவினர்  இருப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார்.

“அஸ்மின்  முகாம்”,  “ரபிசி  முகாம்”  என்பதெல்லாம்  பிகேஆரில்  கிடையாது  என்றாரவர்.

“பிகேஆர்  தனித்துவம்  வாய்ந்தது.  அதன்  உறுப்பினர்களும்  தலைவர்களும்  பல  பின்னணிகளைக்  கொண்டவர்கள்.

“எங்கள்  கட்சியில்  கருத்துவேறுபாடுகளுக்கு  மதிப்புக்  கொடுக்கிறோம். இதுவே  எங்களின்  பலம்”,  என  ஓரியெண்டல்  டெய்லி  செய்திதாளுக்கு  வழங்கிய  நேர்காணலில்  அஸ்மின்  கூறினார்.

சிலாங்கூர்  அரசில்  காரியம்  ஆக  வேண்டுமென்றால்  பணத்தையும்  பெண்ணையும்  எதிர்பார்க்கிறார்கள்  என்று  ரபிசி  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்திடம்  செய்துள்ள  புகார்  குறித்தும்  அஸ்மினிடம்  வினவப்பட்டது.

இவ்விசயத்தில்  அதிகாரிகளின்  விசாரணைக்கு  மாநில  அரசு  முழு  ஒத்துழைப்பு  வழங்கும்  என்றவர்  உறுதி  கூறினார்.

“ஒளிப்பதற்கு  ஏதுமில்லை.  விசாரிக்கும்  பொறுப்பை  அதிகாரிகளிடமே   விட்டு  விடுகிறோம்.

“புகார்  செய்தவரைக்  குறை  சொல்ல  விரும்பவில்லை.  ஏனென்றால்,  ஜனநாயக  ஆட்சிமுறையில்  எங்களிடம்  ஒளிவுமறைவு  இல்லை,   விமர்சனங்களை  ஏற்க  எப்போதும்  தயாராக  இருக்கிறோம்”, என்றார்.