ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

bri1ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கின.

இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.

இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

 -http://news.lankasri.com

பிரித்தானியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது: Nigel Farage பெருமிதம்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.

ஆனால், அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால், பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது உறுதி என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.

இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான Nigel Farage, ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றோடு போராடிக்கொண்டிருந்த எங்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டதா

bribri

ல், இனி பிரித்தானியா நாடு நேர்மையான பாதையில் பயணிக்கும்.

 

எவ்வித நாடுகளின் ஆதரவும் இன்றி, தனி நாடாக இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

யூன் 23 ஆம் திகதி தான் பிரித்தானியா வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த நாளாக கொண்டாடப்படவேண்டும் என கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என Nigel Farage பிரசாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

 2050ல் லண்டனில் முஸ்லீம் தான் ஆட்சி செய்வார்கள்- பெரும் சர்சையை கிளப்பும் போட்டோ..

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று கூறும் ஒரு பெரும் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறித்த அமைப்பிற்க்கு 27 மில்லியன் பவுன்டுகள் இதுவரை நிதி உதவி கிடைத்துள்ளதால் பிரித்தானிய பிரதமர் அலுவலகமே ஆடிப்போயுள்ளது என்கிறார்கள். அதாவது அரசாங்கத்தால் கூட இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை திரட்ட முடியாது உள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளோடு இணைந்திருக்க வேண்டும் என்று பரப்புரை செய்ய அரசாங்கத்தால் கூட 27 மில்லியனை ஒதுக்க முடியாது. அந்த அளவுக்கு பல செல்வந்தர்கள், பிரித்தானியா வெளியேறவேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, பெரும் பண முதலையான பெண் ஒருவர் இருக்கிறார்.

அரபெல்லா ஆக் வயிட் என்னும் இப்பெண்மணி பெரும் செல்வந்தர் ஆவார். அவர் தனது ரிவீட்டரில் 2050ம் ஆண்டு பிரித்தானியா முழுவதும், முட்டாக்கு அணிந்த முஸ்லீம் பெண்கள் செல்வது போலவும். அங்கே ஒரே ஒரு ஆங்கிலப் பெண் , இருப்பது போலவும் ஒரு படத்தை வெளியிட்டு பெரும் சர்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். அப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெண்மணி பாட்டியே ஏன் இதனை நீங்கள் தடுக்கவில்லை என்று கேட்பது போல வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரித்தானிய மகாராணியை(பாட்டி என்று அழைப்பது) குறிப்பது போல உள்ளது. நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவேண்டும் என்று அன்றே கூறி இருந்தால் தற்போது இன் நாட்டை முஸ்லீம்கள் ஆளவேண்டி வந்திருக்காதே என்ற பொருள்பட இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

-http://www.athirvu.com