இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்

indian_fishermansமீனவர்களை செருப்புக்கால்களால் தாக்கி மீன் பிடி சாதனங்களை கொள்ளையடித்த சம்பவம் தமிழக கடலோரப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தால்; ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 750 விசைபடகுகள் உள்ள நிலையில் நேற்றுக்காலை நூற்றுக்கும் குறைவானவிசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுபெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் தனுஷ்கோடிக்கு ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொன்டிருந்த போது மீன்பிடிக்க விடாமல் இரவு 7 மணிவரை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தியுறுத்தியால் மீன்பிடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியதாக மீனவர்கள குற்றம் சுமத்தினார்கள் இந்நிலையில் சகாயம் என்பவரின் படகிலிருந்த மீனவர்கள மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இந்தியப் பகுதிதானே எனக்கேட்டதையடுத்து படகு கடன் மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

சுமார் ஆறு மணி நேரம் மீனவர்களை கயிற்றால் கட்டிப்போட்டு காலால் மிதித்து சித்தரவதைக்கு உள்ளாக்கியதோடு கடலுக்குள் மீனவர்களை தள்ளிவிட்டு அச்சுறுத்தியதாகவும் குடிக்க வைத்திருந்த குடி நீரைக்குகூட கடலில் ஊற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கூறிய மீனவர்கள் படகிலிருந்த செல்வம் என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆறு மணி நேரத்திற்க்குப் பின் படகையும் மீனவர்களை விடுவித்ததாக கரை திரும்பிய மீனவர்கள அச்சத்துடன் கூறியுள்ளனர்..

பின் இரவு மீன்பிடித்துவிட்டு அதிகாலை கரை திரும்பும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மற்றும் 30 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 -http://www.tamilwin.com
TAGS: