நஜிப்: இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்தவர்களையும் நிராகரிப்போம்

 

najibrejectantiislamஇஸ்லாமிய சமயத்தைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.

“இந்த புண்ணிய பூமியில் இஸ்லாம் மீதான போராட்டத்தில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இஸ்லாத்தை விரும்பாதவர்களை நாம் நிராகரிக்கிறோம். அவர்கள் யார் என்றும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நமக்குத் தெரியும்.

“முஸ்லிம்கள் என்ற முறையில் அதிகாரப்பூர்வமான இஸ்லாத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியது நமது கடப்பாடு ஆகும், உண்மையான இஸ்லாம், அது தீவிரமானதோ பரந்த மனப்பான்மையுடையதோ அல்ல, ஒரு மிதமான இஸ்லாம்”, என்று நஜிப் இன்று பெக்கானில் கூறினார்.

இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இதர சமயங்களையும் மதிக்க வேண்டும். அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு இஸ்லாம் கொண்டுவந்துள்ள நல்லவற்றை காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.