முகைதினையும் முக்ரிசையும் நீக்கும் முடிவுக்கு பெர்லிஸ் அம்னோ ஆதரவு

perlisகட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  கட்சிநீக்கம்  செய்யும்  அம்னோ  உச்ச  மன்ற  முடிவை  பெர்லிஸ்   அம்னோ  முழுமையாக  ஆதரிக்கிறது.

உச்ச  மன்றம்  கடந்த  வியாழக்கிழமை  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டாலையும்  இடைநீக்கம்  செய்தது.

பெர்லிஸ்   அம்னோ  தலைவர்  ஷகிடான்  காசிம் “முகைதினும்  முக்ரிசும்  கோலா  கங்சார்,  சுங்கை  புசார்  இடைத்  தேர்தல்களில்  எதிரணியினரின்   பரப்புரைக்கு   உதவினார்கள்”  என்பதால்  பெர்லிஸ்  அம்னோ  உச்ச   மன்றத்தின்  முடிவை  ஆதரிக்க  வேண்டிய  கட்டாய  நிலையில்  இருப்பதாகக்  கூறினார்.