அரசாங்கம் வாடகை மட்டும் கொடுக்கிறது; வேறு பண உதவி செய்வதில்லை என்கிறது பெர்டானா அறக்கட்டளை

foundationமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தலைமையில்  செயல்படும்  பெர்டானா  தலைமைத்துவ  அறக்கட்டளை   அரசாங்கம்   அதற்குப்  பண  உதவி   செய்திருப்பதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறது.

அறக்கட்டளையில்  அமைந்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்    அலுவலகத்துக்கான   வாடகைப்  பணத்தை    மட்டும்   அரசாங்கம் கொடுப்பதாக  அது  நேற்றிரவு  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  கூறியது/

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்   அந்த  அறக்கட்டளைக்கு  அரசாங்கத்தின்   பண  உதவி  நிறுத்தப்பட  வேண்டும்  என்று  அம்னோ  உச்ச  மன்றம்  முடிவெடுத்திருப்பதாகக்  கடந்த  வெள்ளிக்கிழமை  கூறியிருந்ததற்கு  அறக்கட்டளை  இவ்வாறு  விளக்கம்  அளித்துள்ளது.

அரசாங்கம்  முன்னாள்  பிரதமரின்  அலுவலகத்தில்  பணிபுரியும்  அரசு  அதிகாரிகளுக்கான  சம்பளத்தையும்  கொடுக்கிறது.

மற்றபடி,  அறக்கட்டளையை  நடத்துவதற்கான  செலவுகளையோ  அங்கு  வேலைக்கு  அமர்த்தப்பட்டிருக்கும்  பணியாளர்களின்  சம்பளத்தையோ அரசாங்கம்  கொடுப்பதில்லை  என்று  அது  கூறிற்று.