முகைதின் -முக்ரிஸ் புதிய கட்சி தொடங்கலாமா?

pageமுக்ரிஸ்  மகாதிரின்  ரசிகர்  மன்றம்  அதன்  முகநூல்  பக்கத்தில்  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  இணையத்தில்  ஓர்  ஆய்வைத்  தொடங்கியுள்ளது.

அம்னோவிலிருந்து  வெளியேற்றப்பட்ட  அந்த  முன்னாள்  கெடா  மந்திரி  புசாரும்  அம்னோவின்  முன்னாள்  துணைத்  தலைவரான  முகைதினும்   இடைநீக்கம்  செய்யப்பட்ட  அம்னோவின்  முன்னாள்  உதவித்   தலைவர்  ஷாபி  அப்டாலுடன்  சேர்ந்து   “ஒரு  புதிய   அரசியல்  தள”த்தை   உருவாக்கிக்  கொள்வது  பற்றிப்  பரிசீலித்துக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவதை  அடுத்து  அம்மன்றம்  இந்த  ஆய்வைத்  தொடங்கியுள்ளது.

அது  அதன்  ஆதரவாளர்களிடம்  ‘3எம்ககள்’(முகைதின் -முக்ரிஸ்- முகமட் ஷாபி)  புதிய  கட்சி  அமைப்பதை  ஆதரிக்கிறீர்களா  என்று  கேட்டிருக்கிறது.

இன்று  காலை மணி  11.40வரை  629  பேர்  அதற்கு  மறுமொழி  இட்டிருந்தனர்.  சிலர்  “ஆம்”  என்றார்கள்.  வேறு  சிலர் “இல்லை”  என்றார்கள்.