அமைச்சரவை சீரமைப்பு: சரவாக் தலைவர்களுக்கு ஏமாற்றம்

Postபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  அறிவித்த  அமைச்சரவை  சீரமைப்பு  சரவாக்  தலைவர்கள்  பலருக்கு   ஏமாற்றமளித்துள்ளது.

பார்டி  பெசாகா  பூமிபுத்ரா  பெர்சத்து (பிபிபி)  மூத்த  உதவித்  தலைவர்  டக்லஸ்  உங்கா  எம்பாஸ்,  தாம்  காலி  செய்த  தோட்டத்  தொழில்,  மூலப்  பொருள்  அமைச்சுக்கு  ஒரு  சரவாக்கியர்தான்  நியமிக்கப்படுவார்  என்று  பலரும்  எதிர்பார்த்தனர்  என்றார்.

“ஆனால், என்  முந்தைய  பதவிக்கு  சரவாக்  எம்பி  எவரும்  நியமிக்கப்படாதது   ஏமாற்றமளிக்கிறது”,  என்றவர்  தெரிவித்ததாக  த  போர்னியோ  போஸ்ட்  கூறியது.

மே  மாத  சரவாக்  தேர்தலில்  புக்கிட்   சாபான்  தொகுதியில்  வெற்றி  பெற்ற   உங்கா  சரவாக்  துணை  முதலமைச்சராக  நியமுக்கப்பட்டதால்   அமைச்சர்  பதவியைத்  துறந்தார்.

சரவாக்கின்  இன்னொரு  துணை  முதலமைச்சரான    ஜேம்ஸ்  ஜெமுட்   மாசிங்கும்  சரவாக்  ஒரு  முழு  அமைச்சர்  பதவியை  இழந்து  விட்டது  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“டக்ல்ஸ்  உங்காவின்  பதவி   மேற்கு  மலேசிய  அரசியல்வாதி  ஒருவருக்குக்  கொடுக்கப்பட்டதில்   சக சரவாக்கியன்  என்ற  முறையில்  எனக்கு  ஏமாற்றமே”,  என  மாசிங்  கூறியதாக  த  போர்னியோ  போஸ்ட்  அறிவித்தது.

“ஒரு  முழு  அமைச்சர்  பதவியை  இழந்தோம்,  அதற்கு  ஈடாக  துணை  அமைச்சர்  பதவி  கொடுக்கப்பட்டுள்ளது”,  என்றாரவர்.
என்றாலும்  கூட்டரசு  அமைச்சர்களை  நியமிப்பது   பிரதமரின்  உரிமை  என்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.
சர்வாக்   தலைவர்கள்   ஏமாற்றம்    அடைந்தாரக்ள்   என்றால்   அதற்கும்  ஒரு  காரணம்   உண்டு  என்று   போர்னியோ  போஸ்ட்   கூறியது.  காபிட்  எம்பியும்  கிராம,  வட்டார  மேம்பாட்டு  துணை  அமைச்சருமான அலெக்சாண்டர்  நந்தா  லிங்கி  அல்லது   சரதோக்  எம்பி  வில்லியம்   மாவான்  ஐகோம்தான்  உங்கா  காலி  செய்த  அமைச்சர்  பதவிக்கு  நியமிக்கப்படுவார்கள்  என்று  அவர்கள்  பெரிதும்  எதிர்பார்த்தனர்.

ஆனால்,  அப்பதவி  கெராக்கான்   தலைவர்  மா  சியு   கியோங்குக்குக்  கொடுக்கப்பட்டது.