முதன் முறையாக சினிமா வரலாற்றில் ஏர் ஆசியா விமானத்தில் “கபாலி”..!

kabaliசினிமா வரலாற்றில் முதன் முறையாக ஏர் ஆசியா விமானத்தில் கபாலி படத்தின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் ஆசியா விமானத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் கபாலி படத்தின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது

ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கபாலி. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ 2 கோடி பேர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னரான ஏர் ஆசிய நிறுவனம், தங்கள் விமானத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கபாலி படத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.மேலும் தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது.

உலக சினிமா வரலாற்றில், ஒரு நடிகரின் உருவத்தை விமானத்தில் வரைந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 15–ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘கபாலி’ பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்களில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்,’ ‘உலகம் ஒருவனுக்கா உழைப்பவனுக்கா விடை தருவான் கபாலிடா,’ ‘நாங்க எங்க பிறந்தா அட உனக்கென்ன போடா தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்தான்டா,’ ‘மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது,’ போன்ற வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.

இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் வருகிறார். வெளிநாட்டில் வில்லன்களால் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறும் தமிழர்களை மீட்க அவர் நடத்தும் அதிரடி போராட்டமே படத்தின் கதை. இந்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

-http://www.athirvu.com