யார் அந்த “காட்டுப் பெருமாள்”? நூல் வெளியீடும் கருத்துக்களமும்

kaattu perumal

யார் அந்த “காட்டுப்பெருமாள்”? காலனித்துவ காலத்தில் தோட்டத்தில் பந்து விளையாடும் ஒரு தொழிலாளியின் அழகிய மகன் எப்படி ஆங்கிலேயர்களுக்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டான்? அடிபணிந்து வாழ்ந்த  தொழிலாளர்களின் மத்தியில் இவன் எதனால் காட்டில் தலைமறைவானான்? யாருக்காக போராடினான்?

தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சியையும் முதலாளித்துவ அராஜகத்தையும் எதிர்த்து, துணிந்து நின்று போராடியவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து தோழர் தேவ் அந்தோனி ஆங்கிலத்தில் எழுதிய நூலை, கடந்தாண்டு மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) புத்தகமாக வெளியிட்டிருந்தது. அந்நூலை மேஜர் காளிதாஸ் தமிழாக்கம் செய்துள்ளார்.

காட்டுப் பெருமாள் –  நூல் வெளியீடும் உழைக்கும் மக்களே அரசியல் மாற்றத்திற்கான சக்தி என்ற தலைப்பில் ஒரு கருத்துக்களமும் ஸ்கூடாயில் நடைபெறவுள்ளது.

 

மலேசியாவில் முதல் முறையாக ‘காட்டுப் பெருமாள்’  தமிழ்ப் புத்தக வெளியீடு ஸ்கூடாயில் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது:-

நாள்    :-  09.07.2016 (சனிக்கிழமை)

நேரம் :- மாலை மணி 7.30

இடம் :- எண் 8ஏ, ஜாலான் ரொங்கேங் 11, தாமான் ஸ்கூடாய் பாரு, ஸ்கூடாய்,   

ஜொகூர்பாரு (No.8A, Jln Ronggeng 11,  Tmn Skudai Baru, Skudai , JB)

நூலாய்வு : தோழர் நாகேந்திரன் , பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினர்.

பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியி ல், ‘உழைக்கும் மக்களே அரசியல் மாற்றத்திற்கான சக்தி’  எனும் கருப்பொருளில் கருத்துக் களமும் நடைபெறவுள்ளது. அக்கருத்தரங்கின் விவரம் பின்வருமாறு :-kaatu perumal

 

பேச்சாளர்கள் :

தோழர் நித்தியா,  பி.எஸ்.எம். சிரம்பான் கிளைத் தலைவர்

தலைப்பு :- ‘சுதந்திரப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு’

தோழர் தீபா , பி.எஸ்.எம். இளையோர் அணி தலைவர்

தலைப்பு :- ‘இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் போராட்டம்’

தோழர் சுரேஸ் , பி.எஸ்.எம். மத்திய செயற்குழு உறுப்பினர்

தலைப்பு :-  ‘சமகால அரசியலில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைப்பாடு’

நடுவர்:-  சாந்தலட்சுமி பெருமாள்

ஒருங்கிணைப்பாளர்:  ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்

சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இந்த இலவச நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து பயன்பெற ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு :-  017 754 0597 / 013 758 6881   முகநூல்:- PSM Cawangan Nusajaya