நான் பயங்கரவாததை ஆதரிப்பது இல்லை, ஸாகிர் நாய்க் கூறுகிறார்

 

Zakirsaysnoதமது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுவதை இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் மறுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான விசாரணை எதனையும் வரவேற்பதாக கூறுகிறார்.

பங்களாதேசம், டாக்காவில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த பயங்கரவாதிகளில் இருவர் மும்பாயை தளமாக கொண்டிருக்கும் ஸாகிரின் சமூக ஊடகத்தை பின்பற்றுபவர்கள் என்ற செய்தி வெளியான பின்னர் ஸாகிர் மேற்கண்டவாறு கூறினார்.

தாம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பாதாக கூறுவது முற்றிலும் நியாயமற்றது என்று அவர் கூறியதாக சிஎன்என்-நியுஸ் 18 நேற்று செய்தி வெளியிட்டது.

“டாக்டர் ஸாகிர் நாய்க் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக எந்த ஒரு விசாரணை குழுவும் கூறவில்லை. எனது அனைத்து உரைகளையும் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சு வரவேற்கப்படுகிறது”, என்று அவர் கூறினார்.

தம்மை பின்பற்றுவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை தமக்கு தனிப்பட்டமுறையில் தெரியாது என்றாரவர்.