தமிழர் திருநாளில் “தமிழர்கள் கோழை, நாம் தமிழர்களுக்கு பெருமையில்லை” சுயசித்தாந்தமானது. தமிழர் தேசியம் கண்டனம்.

writerதமிழர்கள் தமிழ் மொழியின் இன அடையாளம். உலகில் பல நாடுகளுக்கு தமிழன் சரித்திரபூர்வ சொந்தக்காரன். உலக மானுட வாழ்வியல் வழி பன்னாட்டு மனித சுதந்தரம், மனித உரிமையில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மலேசியாவிலும் இதர நாடுகளிலும் இதரவர்களோடு தமிழர்கள் குடிமக்களாக வாழும் புகழ் நமக்குண்டு.

மலேசியாவில் 1000 ஆண்டு வரலாறுகளை பேராசியர்கள் பேசாது, எழுதாது போனாலும் மலேசியாவில் சமீப 200 ஆண்டு போராட்டங்களை தெரியாமல் இருந்தால் படித்த தமிழனுக்கு பிச்சை பாத்திரம் பட்டம்தான் தர வேண்டும்.

உலகில் தமிழனுக்கு தனி நாடு இல்லை என்றாலும் எந்நாட்டிலும் வாழும் உரிமையில் நமக்கு கேடு ஏதுமிலை.தமிழனின் ஒற்றுமையே முன்னேற்றதின் வித்து என பல முயற்சிகள். எதனால் இங்கு வந்தோம் எதை கொண்டு வந்தோம் என்ற பெரும் தொன்மை இனமான தமிழனுக்கு பூமியில் எந்த சுமையும் இல்லை. ஆனால் சிறுமை எல்லாம் படித்த அரசியல் வாதிகள் வாய்க்கு வந்தபடி தரும் தொல்லைகளால்தான் நம்மை நாம் இழந்துள்ளோம்.

மேகங்கள் மனிதர்களை கோழைகள் என்று சொல்லி இருந்தால் மன்னிக்கலாம். காரணம் அது நிலை இல்லாதது.நம்மைக்கென்ன ஒருவர் இல்லாமல் போனாலும் யாராவது ஒருவர் இருப்பார் என்பது உலக நியதி. ஆனால் நம்மவன் நம்மை “கோழை என்றும் நாம்தமிழன் என்று சொல்வதில் பெருமை இல்லை ,,, இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் தமிழனும் தமிழும் அழிந்து விடும்” என்று சொல்ல தமிழர் திருநாள்தான் இந்த அறிவிலிக்கு கிடைத்த சபையா ?

50 ஆயிரம் ஆண்டுகள் தமிழகத்தையும் ,20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சிவ பக்தன் இராவணன் இலங்கையை ஆண்டான் என்பது திராவிடம் பேசும் ராமசாமிக்கு என்ன தெரியும் ?

ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்பது அரசியல் கொடுத்த காலக்கெடு சிற்றின்பம். இதில் கழுகுகளுக்கு வானம்பாடிகள் பறக்க கற்றுக்கொடுக்க வேண்டாமே !

செம்மொழிக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவனின் வீரம் ,விவேகம் .பண்பாட்டு செழுமைகளை இதுவரை எவனும் மறுக்க வில்லை. புவியின் பூமத்திய ரேகையின் மையப்பகுதியை 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கண்டவன் தமிழன். அந்த ஆரோக்கியமான தமிழனை கோழை என்று சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது.

தமிழனுக்கும் தமிழுக்கும் அதன் நியாமான உரிமைகளை பேசியவர் நீதானே …கேளடா மானிட வாழ்வில் கீழோர் மேலோர் இல்லை என்று சொன்னவன் உன் பாரதிதானே என்று சொன்னவரத்தானே . நம் பாட்டன் தனே ? நீதி நிலங்கள் வேண்டும், ஆயிரம் மாண்புகள் செய்வோம் என்றதும் நீதானே ?

நமது முடிவுகள் நமது உறவுகளை பாதித்தாலும் இனம் மாண்புடன் வாழ ஒன்றுபடுவோம் என்றதும் நீதானே !

நமது இலக்கு தமிழர் ஈழமும் தமிழர் நாடும் என்கிறாயே …உலகத்த தமிழர் தலைவர் என்றோமே ! நீயா எங்களை கோழை என்றாய்.

தமிழன் என்று சொல்ல எந்த பெருமையும் இல்லை என்று உன் 50 பேர் கொண்ட கிளங்ஜுக்க்ரா மண்டபத்தில் குருவி போல கூவி உள்ளாய். என்ன வியப்பு, உனக்கு என்ன ஆனது?

உனக்காக உன் கனவுகளை புதைக்கும்போது அது ஒரு நாள் வெடிக்கும் என்பதை எப்படி உன்னால் உணர முடியாமல் போனது. நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது இந்த இனம் தந்த அரசியல் ஊதியம்.

ஒரு தமிழ் இனத்துக்கு கடுமையான சோதனை களத்தை கேள்வியாக்கி எங்களை சட்டத்தில் இடுக்கில் தள்ளிவிட்டீர்கள். யாருக்கு என்ன சாமாதானம் சொல்வது. வருகிற ஒவ்வரு தமிழனும் இப்படி துப்பி விட்டுப்போனால் அடுத்த தமிழனின்பிரதிநித்துவ தலைமைக்கு எந்த தலையை நாங்கள் முன் வைப்பது? இதரவன் நம்மை எப்படி மதிப்பான்,

நிலையான ஒரு புள்ளியில் தானே கோலங்கள் வரைய முடியும் இறைத்துவிட்டு போகும் வார்த்தையில் விதியை
விரக்தி அக்கினியை இனி எப்படி கட்டியணைத்து காப்பது.

தமிழனின தலைவன் பிரபாகரனை கொன்று விட்டோம் என்று கொக்கரிக்கும் இலங்கையின் முன் மலேசியாத் தமிழர்களை கொல்லாமல் கொன்றுவிட்டு நியாயம்தான் என்ன ?

ஈழத்திற்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை ..தமிழகத்தமிழர்களுக்கு தலைக்குமேல் அரசியல் போராட்டம். மிஞ்சி நிற்கும் எங்களுக்கு இது என்ன பரிகாச கோழைத்தன பட்டமளிப்பு.

தமிழர் தேசியம் வளர விட மாட்டேன் என்பவனை ஊட்டி வளர்த்து அனுப்பி வைத்தாய் ..இப்போது நாம்தமிழர் பெருமை பேசுவதில் பயனில்லை என்கிறீர். தமிழனை பல முறை ஏசி இப்போது கடைசியில் கோழையாக்கி கொன்றதின் எல்லைத்தான் என்ன?

தமிழ் ஈழத்தில் சிங்களவர்களாக மாற்றப்படும் தமிழ் ஈழ மக்களின் நிலையை கேற்க உலகத்தமிழின தலைவர்களுக்கு தகுதி இல்லை ..நாடுகடந்த தமிழ் ஈழ அவையும் பேசுவதில்லை …மலேசியா இந்தியனை 11 பிரிவாக பிரித்து தமிழர்களை வறுமையின் கடைசி கோட்டிற்கு அமுக்கி வைத்துள்ள கேவலத்தை கேற்க ஆளில்லை என்ற இறுக்கத்தில் உங்களின் கோழைத்தன

உரசல் இந்த மலேசியா நாம் தமிழர், தமிழக நாம் தமிழர் தேசிய இனத்தை வேட்டைகுழியில் தள்ளிவிட்டது.
உலகமே திரும்பி பார்க்கும் காலம் வந்து விட்டது என்ற தமிழர்நாட்டின் நாம் தமிழர் எதிர்ப்பார்ப்புக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது ? நீங்களே பதில் சொல்லுங்கள் ஐயா ?
பொன், ரங்கன்
தமிழர் தேசியம் பேரவை
நாம் தமிழர்
தமிழர் சங்கம்