உனக்கு ஏண்டா இந்த சினிமா பிச்சை பொழப்பு ?

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

படைத்தவரையும்,தாய் தகப்பனையும்
kabali345தொழ வேண்டிய கைகள்…
பார்க்க வேண்டிய கண்கள்…
பேச வேண்டிய உதடுகள்…
போயும் போயும் ஓர் அற்பமான
தமிழ்ப் படத்திற்காகவா பரதேசிகளாக வேண்டுமா ?

அருகில்,தான் பெற்ற பிள்ளையின்
அன்புஒரு நொடியாவது கிடைக்காதா
என பெற்றோர் ஏங்கியிருக்க…
நாளை வரப் போகும்
கேலிக் கூத்துக்கு,சீட்டை
வாங்கியாகிவிட்டதை நினையும் போது

“அட,பிஸ்கோத்துகளே!”
எனச் சிரிக்கத் தோன்றுகிறது!
பார்க்காதே எனக் கூற
யாம் எத்தனிக்கவில்லை!

Superstar-Rajinikanthஇறுதியாக உம் வயதான பெற்றோரை
என்று கண்டு ஆறத் தழுவினாய்
எனச் சிந்திக்கச் சொல்கிறோம்!

புகழாரம் என்பது சினிமா
எடுத்தவனுக்கெல்லாம் சூட்டினால்
அதன் மதிப்பு மங்கிப்போம்!

உரிய உம் பெற்றோருக்கு
மட்டுமே சூட்டி,
பாலாபிஷேகம் செய்ய கற்றுக் கொள்

எம் தமிழினமே!
கபாலி பலிவாங்கும் பரிதேசி வேலை.
நமது சமயமும் திருக்குறளும்
சொல்லாத மிருகக்கொலை
காலம் கடந்த மன உலைச்சல்.
rajiniநிறுத்துடா வேமானி உன் குரைச்சலை!

பொய் பித்தலாட்டம் உன் சினிமாத்தனம்.
நீ சொல்ல ஒன்னும் தேவயில்ல .
. நாங்கள் கோயில் காளடா ….
குச்சி தீ மிரட்டல் என் சூடத்தை சுடாதுடா ..

ஜான் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளையடா
என் தமிழன் உறவும்
உணர்வும் கொதிக்குதுடா
உனக்கு ஏண்டா இந்த
சினிமா பிச்சை பொழப்பு ?

-பொன். ரங்கன்

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • சகாயன் wrote on 24 July, 2016, 16:41

  உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், இதில் நாம் யோசிக்கவேண்டியவை இது சினிமாக்காரர்களின் தப்பில்லை. அது அவர்களின் தொழில் வியாபரம். இந்த நிலமை இப்போது மட்டும்லல். சினிமா என்று எப்போது தோன்றியதோ அப்போதிலிருந்து அதன் வேரை நன்றாக் ஊன்றிக்கொண்டுவிட்டது. ஆனால், இந்தச் சினிமாவை வைத்து பிழைக்க வழி கண்டுபிடித்தவர்கள் DMK என்ற் திமுக் அறிவாளிகளால்தான். தம்ழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழர்களுக்கான போராட்டக் கட்சி என்று சொல்லிக்கொண்டு அந்தக் கட்சியைச் சார்ந்த அல்லது அவர்களுக்கான கட்சியாக் ”திராவிடர்” இயக்கமாக மாற்றிக்கொண்டு த்ஙளை வளர்த்துக்கொண்டதுதான். இன்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலக முழுமையும் இந்த திரவிட இன ம் வளர்ந்து ஆலமரமாகிவிட்டது. ஒருவேலை பிரபாகரன் அவர்கள் வெற்றிபெற்றிருந்தால் இந்த நிலமை தலைகீழாக மாறியிருக்கலாம். இதிலும் இன்னொரு மிக்ப்பெரிய வேடிக்கை என்னவென்றால், ஈழ்த் தமிழர்களால் நடத்தப்படும் சில இனண்யதள வானொலிகளில் ரஜனியை தலைவர் என்று சொல்லி ஆலாதிபபது. கபாலி வெளியீட்டிற்குப்பின் இது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

 • ராஜ நாகம் wrote on 24 July, 2016, 20:33

  சல்யூட் சகாயன் அவர்களே

 • inthutharman wrote on 18 September, 2016, 21:54

  தமிழனின் மூடத்தனத்தின் தொடர்ச்சி.. பெரியார் , அண்ணா, எம்ஜியா கலைஞர் போன்ற பொறம்போக்கு தலைவர்கள் காட்டி ; ஊட்டி வளர்த்த விதம் இந்த நிலைக்கு காரணம்.

 • கபாலி wrote on 19 September, 2016, 11:12

  சினிமா பிச்சை எடுத்துக்கிட்டு அரசியல் சாக்கடைக்கு வந்து தமிழனை தீக்குளிக்க வைத்து கொல்லும் சீமானை பார்த்தா – என் தமிழன் உறவும் உணர்வும் நெகிழ்கிறதடா
  சினிமா பிச்சை எடுத்தாலும் அரசியல் சாக்கடைக்கு வராமலும் தமிழனை கொல்லாதிருக்கும் ரஜினியை பார்த்தா – என் தமிழன் உறவும் உணர்வும் கொதிக்குதுடா

 • abraham terah wrote on 19 September, 2016, 12:34

  வழக்கம் போல் யாரையோ பார்த்துக் குரைக்கிறார்!! அதில் வேறு சமயம், திருக்குறள் எடுத்துக்காட்டுக்கள்! அடடா!

 • சேரன் R.  கீழ ராஜ வீதி மன்னார்குடி  wrote on 19 September, 2016, 19:34

  ஆபிரகாம் டேரா கபாலி எழுதிய விதம் வேண்டுமானால் வழக்கம் போல் யாரையோ பார்த்துக் குரைக்கிறார் எனலாம். ஆனால் அவர் நீண்ட கட்டுரை எழுதாமல் சுருக்கமாக கூறி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
  2 ஆண்டுகளுக்கு முன் இதே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவின் செருமங்கலம் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வேலைசெய்து கொண்டே படிக்கிறேன் என்று சென்றவன் இறுதியில் தனது அறையில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை புரிந்து கொண்டான். இதே அறையில் தங்கியிருந்த அவனுடைய நண்பன் ஒருவன் ஊர் பெயர் சரியாக தெரிவில்லை இவன் தற்கொலைக்கு 10 நாட்களுக்கு முன் தற்கொலை புரிந்து கொண்டதாக தெரிகிறது. இருவருமே நாம் தமிழர் இயக்கத்தில் தீவிரமாக செயல் பட்டவர்கள் என்பது பிறகு தெரிய வந்தது. எனக்கு தெரிந்தவரையில் திருவாரூலிருந்து செனனைக்கு வேலைக்கு செல்கிறேன் அல்லது படிக்க செல்கிறேன் என்று சென்றவர்களின் 2வது தற்கொலை இது ஆகும். இதேபோல் சென்னையில் தினமும் தற்கொலை புரிந்து கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் உடல் அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல படுகிறது என்பதுதான் உண்மை. இப்படி தற்கொலை புரிந்து கொள்ளும் தமிழ் இளைஞர்களின் பின்னணியை ஆராய்ந்தால் இறுதியில் கிடைக்கும் பதில் நாம் தமிழர் இயக்கத்தில் சேர்ந்ததின் விளைவு என்பது புரியும்.
  சமீபகாலமாக பல கட்சிகள், இயக்கங்கள் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆனால் அவர்கள் போராட்டத்தில் தீக்குளிப்பு, தற்கொலை முயற்சி என்று எவரும் ஈடுபடுவதில்லை. அதே சமயம் நாம் தமிழர் இயக்கம் நடத்தும் போராட்டத்தில் மட்டும் தமிழ் இளைஞர்கள் சென்னைவாசிகள் அல்ல குறிப்பாக வெளி ஊர்களிருந்து வருபவர்கள் மட்டும்தான் தீக்குளிப்பு, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவதில்தான் சந்தேகமே எழுகிறது.  வெளி ஊர்களிருந்து அதுவும் கிராமபுறங்களில் வரும் தமிழ் இளைஞர்களை குறி வைத்து நாம் தமிழர் இயக்கம் செயல் படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலை தொடறுமாயின்
  மரணம் என்றால் தமிழர்கள் என்று பார்க்க மாட்டேன் தமிழர்கள் இறந்தால் மரணம் என்று கூற மாட்டேன் உயிர்த்தியாகி என்று உசுப்பேற்றுவேன் என்பது நாம் தமிழர் இயக்கத்தின் தாரக மந்திரமாகலாம்.         
  தீக்குளிப்பு, தற்கொலை முயற்சி  எவ்வளவு மடத்தனமானதோ அதேபோலத்தான் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாகும் நாளில் ரசிகர்கள் என்ற பெயரில் போஸ்டருக்கு புஜை செய்வது, பாலாபிஷேகம் செய்வது சில விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாமல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது  போன்றது ஆனால் தீக்குளிப்பு, தற்கொலை போன்றவை நடைபெறாதது ஒரு ஆறுதல். 

 • Anonymous wrote on 19 September, 2016, 23:51

  இந்தியாவில் சிறுநீரகம் இலகுவில் வாங்க கூடிய இடம் சிங்கார சென்னை (???) சில வேலை இந்த சிறுநீரக வியாபாரிகள் இந்த மரணம்களுக்கு காரணமக்க இருக்கலாம் 

 • Anonymous V wrote on 20 September, 2016, 9:17

  சிறுநீரக வியாபாரிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் சிறுநீரக வியாபாரத்தில் தொடர்பு இருக்கலாம்

 • குஞ்சி மயிரை மீன் wrote on 20 September, 2016, 9:32

  ஆமாம் ஆமாம் விடுதலை புலிகளும் இதேமாதிரிதான் சிறுநீரக கடத்தல்,அனைத்துலக போதை பொருள் கடத்தல்கள் எல்லாம் செய்து அவர்கள் இயக்கத்தை வளர்த்தார்கள்!!!

 • abraham terah wrote on 20 September, 2016, 9:40

  சேரன், உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. தீக்குளிப்புக்களை நான் ஆதரிக்கவில்லை. அதே சமயம் நீங்கள் அதற்கு நாம் தமிழர் இயக்கம், சீமான் தான் காரணம் என்பதை நான் ஏற்கவில்லை. நீங்கள் ஏதோ ஒரு திராவிடக்கட்சியின் அனுதாபியாக இருக்கலாம். அதனால் நாம் தமிழர் இயக்கம் தான் காரணம் என்கிறீர்கள்.எல்லாம் காரணம் உண்டு. தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி என்பதை தமிழர் அல்லாதார் பலர் விரும்பவில்லை. அதனை வலியுறுத்தி வருபவர் சீமான். ஓங்கி ஒலிக்கும் அவரின் குரலை ஒடுக்க வேண்டும் என்பது தமிழர் அல்லாதார் பலர் விரும்புகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி ஜெயிலுக்குப் போனால் பலர் தீக்குளிக்கின்றனர். திராவிடக் கட்சிகள் பணம் கொடுத்து அவர்களை வளர்க்கின்றனர். ஆனால் சீமான் குரல் கொடுப்பதோ ஒரு பெரிய போராட்டம். அப்படி அவர் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! ஆனால் அந்தத் தீக்குளிப்புக்கு சீமான் தான் காரணம் என்பதை நான் ஏற்கவில்லை. உங்கள் பெயரைப் பார்க்கும் போது நீர் பக்கத்து மாநிலத்தவராக இருக்கலாம்.தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் மாற்றுக கருத்து இல்லை. தீக்குளிப்பு என்பது கோழைத்தனம். அதனை நான் வரவேற்கவில்லை!.

 • Anonymous wrote on 20 September, 2016, 14:19

  தீக்குளிப்பு கலாச்சாரத்தை தொடங்கியதே இந்த நடமாடும் பிணத்தின் கட்சிதான் ..ஆனா இவனின் குடும்பத்தில் ஒருவரும் தீக்குளிக்க மாடடார்கள் ..குப்பன் ..சுப்பன் உயிர்கள் எல்லாம் இவனுக்கு மலிவு ..எத்தனை பிணத்தின் மேல் தேர்தல் வெற்றி கண்டு இருப்பார்கள் ..கன்னடன் தொடர்ந்து இவர்களுக்கு அடித்தால் தான் இந்த ஈன பிறவிகளுக்கு சூடு சுரணை மானம் பிறக்கும் 

 • Anonymous wrote on 20 September, 2016, 14:21

  பணத்திட்கு தீ குளிக்க தயாராக இருக்கும் பிறவிகள் உலகில் தகர தமிழ் நாட்டில் தான் வாழ்கின்றார்கள் …அரசியல் வியாதிகள் இவர்களை வைத்து பிழைக்கின்றன …

 • மன்னன் wrote on 20 September, 2016, 16:09

  உண்மைதான் அனொனிமாஸ்..

 • மன்னன் wrote on 20 September, 2016, 16:13

  நாம் தமிழர் கட்சி நம்பி நம் தமிழர்கள் முட்டாளாகி அழிந்து போகாமல் இருந்தால் சரி.

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 20 September, 2016, 20:51

  உன்னை போன்ற வடுகர் தலைவர்களை நம்புவதா கோணல் மன்னன் ?

 • தமிழர் எழுச்சிபறை wrote on 20 September, 2016, 23:10

  தன் உடல் அங்கங்களை காட்டி பொழைக்க வந்த கன்னட தெலுங்கச்சி என்ன அன்னை தெரேசாவா ?
  தமிழக தொலைக்காட்ச்சிகளில் தமிழர் உரிமைக்காக விவாதம் வந்தேறிகளை கொண்டு வச்சு பேட்டி எடுப்பானுங்க …
  சீமான் இனவெறியை தூண்டுறாரு அய்யய்யயோ திராவிடபோர்வையில் தமிழகத்தை கொள்ளையடிக்கும் ஈனதெலுங்கர்களுக்கு ஆபத்து ஆபத்து ..போர் போர் சீமான் இனவெறியை தூண்டுறாரு காணொளி இணைப்பு

  https://www.youtube.com/watch?v=49tPVmtjE9I

 • கபாலி wrote on 21 September, 2016, 10:34

  ……பறை இப்படியே எழுதிக்கிட்டு இரு எங்களுக்கும் போரடிக்காமல் TIME PASS பண்ண வசதியா இருக்கும்

 • Dhilip 2 wrote on 27 September, 2016, 2:22

  சீர் தூக்கி பார்க்கும் கருத்துக்களே நம்மவர்களிடன் இல்லையா ? இன்னமும் வரும் காலத்திற்கு இப்படியே அடுத்தவரை குறை சொல்லித்தான் இவர்களை நியாய படுத்துவார்களா ? ஒரு கார்ல் மாஸ் , ஒரு பிளாட்டோ ஒரு அரிஸ்டோட்டல், ஒரு பாரதியார், ஒரு பெரியார் என்று பகுத்தறிவாதிகளே கிடைக்க மாட்டார்கள ?

 • saranboy wrote on 14 March, 2017, 11:24

  பொன் ரங்கன் எழுதிவிட்டு ஒரு முறை அவரே படித்து பார்த்தால் நல்லது. அவர் எழுதினது அவருக்கே புரிந்தால் நல்லது.

 • s.maniam wrote on 14 March, 2017, 16:49

  தான் உண்டு , தன் வேலை உண்டு , என்று சினிமாவை தன் வயற்று பிழைப்பிற்கு தொழிலாக மேற்கொள்ளும் ரஜினியின் மேல் இங்கு அரசியலை பிழைப்பாக நடத்தும் ! நம்ம நாட்டு காரனுக்கு என் இவ்ளவு வயித்தெரிச்சல் ! தமிழனின் பிறவி குணமோ ! ஒருத்தன் தன் திறமையால் முன்னேறினால் அவனை காரி துப்பு வதே நமது பிழைப்பு ! தானும் படுக்க மாட்டான் !! தள்ளியும் படுக்க மாட்டான் !!

 • அலை ஓசை wrote on 15 March, 2017, 6:22

  எனக்குரஜினியைப்பற்றியோ,மற்றநடிகரை
  பற்றிவிமர்ச்சிக்கும்அருகதைகிடையாது,
  காரணம்திரையரங்கில்,டி.வில்படம்பார்பது
  இல்லைடிவியில் தலையும் வாலுமில்லாமல்
  பார்ப்பதுஉண்டு,ஜல்லிகட்டுஎழுச்சிபோராட்ட
  த்திற்குபிறகுசில உண்ணைகள்வெளிப்பட்டது
  ரஜினி குடும்பமே பீட்டாஉருப்பினர்கள்,
  பீட்டாதணுசைபாராட்டி கோப்பை அளித்துள்ளது,ரஜினிதான்உண்டுதன்வேலை
  உண்டுஎன்றுஇருந்தாரா?இவர்திருட்டுதிராவி
  டக்கட்சிகளை மாற்றி,மாற்றி ஆதரிக்கவில்லை
  யா?பொதுகூட்டத்தில்அவ்வப்போது
  அரசியல்பேசி விமர்சிக்கவில்லையா?

 • அலை ஓசை wrote on 15 March, 2017, 7:52

  திராவிடதிருட்டுகட்சிகளுக்கு,தமிழ்தேசியம்
  பேசும்சீமான்சிம்மசொப்பனம்,அறிஞர்
  அண்ணாவின்தலைமையில்நடந்தஇந்திஎதிர்
  ப்புபோராட்டத்தில்தீகுளித்துஇறந்தது,திருட்டு
  கருணாவுக்காகதீகுளித்தது,ஈழப்போரின்
  போதுமுத்துக்குமார்தீக்குளித்தது,செங்கெடி
  தீக்குளிப்பு,ஜெயாசிறையிலிருக்க பலர்தீக்கு
  ளித்தார்களே,இவைஎல்லாம்செரனுக்கு
  எப்படிதெரியாமல்போய்ற்றுஒருக்கால்மன்னா
  ர்குடியா?சீமானின்தீவிரஆதரவாளர்தீக்குளித்
  ததைகண்டித்துள்ளார்,பிள்ளையைபரிக்கொடு
  த்ததாய் நாம்தமிழர்மேடையில்உணர்ச்சி
  பொங்கபேசிநாம்தமிழர்இயக்கத்துகு
  ஆதரவுகேட்டார்,இதையும்மன்னார்குடி
  பார்க்கவில்லையா?வடுகன் வைகோ
  தமிழ்தேசியத்தைதிராவிடகட்சிகள்ஒன்றினை
  ந்துஅளிக்கவேண்டும்என்றுவேண்டுகோள்
  விட்டாரேபிறகுமறுத்தார்.ஆரிய,திராவிட
  ஊடகங்கள்.டி.விகள்நாம்தமிழர்செய்திகள்
  வராமள்இருட்டடிப்பு.தீபாவுக்குஆரியஊடகங்க
  ள்ஆதரவும்ஆலோசனைவேறு.சீமான்கத்திக்
  கொண்டிருக்கட்டும்விடியும்போதுதமிழகம்
  எழுசியுறட்டும்.நன்றிவணக்கம்!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)