அம்ப்ரின்: 1எம்டிபி கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து பிஏசிதான் முடிவு செய்ய வேண்டும்

ambrin1எம்டிபி  மீதான  இறுதி  கணக்கறிக்கையை    நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்வதா   வேண்டாமா  என்பதைப்    பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)தான்  முடிவு   செய்ய   வேண்டும்  எனத்   தலைமைக்  கணக்காய்வாளர்  அம்ப்ரின்  புவாங்   இன்று   கூறினார்.

அதிகாரத்துவ  இரகசிய   சட்டத்தின்கீழ்   வரும்   அவ்வறிக்கை   அமைச்சரவை,  பிஏசி    போன்றவற்றின்  பார்வைக்காக    சிறப்பாக  தயாரிக்கப்பட்டது  என்றாரவர்.

அதனால்தான்  அதை   நாடாளுமன்றத்தில்    தாக்கல்   செய்யவில்லை,  பேரரசரிடமும்   ஒப்படைக்கவிலை   என்று   அம்ப்ரின்   தெரிவித்தார்.

“அதை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்யலாமா   என்பதை   பிஏசிதான்  முடிவு    செய்ய   வேண்டும்”.  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்   வழக்குரைஞர்    கோபிந்த்   சிங்கின்   கேள்விகளுக்குப்  பதிலளித்தபோது   அம்ப்ரின்   இவ்வாறு   கூறினார்.

அதிகாரத்துவ   இரகசிய  சட்டத்தின்கீழ்க்  குற்றம்   சாட்டப்பட்டுள்ள   பாண்டான்  எம்பி  ரபிசி   ரம்லியின்    வழக்கில்   அம்ப்ரின்   சாட்சியம்   அளித்தார்.