தெரேசா கொக் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது, ஆதாரமற்றது: நீதிமன்றம்

theresaடிஏபி   சிபூத்தே   எம்பி   தெரேசா   கொக்  எட்டாண்டுகளுக்குமுன்   அஸான்   விவகாரம்   தொடர்பில்  உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ்   ஏழு   நாள்களுக்குத்   தடுத்து   வைக்கப்பட்டது   சட்டவிரோதமானது  என்றும்    எந்த  ஆதாரமுமின்றி   அவ்வாறு   செய்யப்பட்டது   என்றும்    முறையீட்டு  நீதிமன்றம்   இன்று   தீர்ப்பளித்தது.

போலீஸ்  அவரைக்   கைது  செய்ததற்குச்  சட்டப்படியான   காரணம்  எதையும்   காண்பிக்கவில்லை    என   அது  கூறிற்று.

அதற்காக  கொக்கிற்கு  ரிம350,000  இழப்பீடு  கொடுக்குமாறும்    நீதிமன்றம்   உத்தரவிட்டது.