நூருல் இஸ்ஸா: திடீர் தேர்தலில் எதிரணி பல தொகுதிகளை இழக்கலாம்

nurulபினாங்கில்   திடீர்    தேர்தல்   நடத்தப்பட்டால்    எதிரணி    பல   இடங்களை   இழக்கும்   ஆபத்து   உள்ளது    என்கிறார்  பிகேஆர்   உதவித்   தலைவர்     நூருல்  இஸ்ஸா   அன்வார்.

“எல்லாருக்குமே   அந்த   ஆபத்து  உண்டு.  மும்முனைப்   போட்டி    என்று  வந்து   விட்டால்    யாருக்கும்   வெற்றி  கிடைக்காது   அம்னோவைத்    தவிர”,   என   நூருல்    இஸ்ஸா   இன்று    கோலாலும்பூரில்   செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

பினாங்கில்    திடீர்    தேர்தல்     நடத்த    வேண்டிய    அவசியம்    இருப்ப்பதாக    பிகேஆர்  கருதவில்லை.   அதைக்  கடந்த   செவ்வாய்க்கிழமையே   அது    டிஏபி-யிடம்   தெரிவித்து   விட்டது.  ஆனால்,  பக்கத்தான்   ஹராபானின்    இன்னொரு   பங்காளிக்   கட்சியான    அமனா    திடீர்   தேர்தல்     நடத்தும்    டிஏபி-யின்    திட்டத்துக்கு    ஏற்கனவே     ஒப்புதல்    தெரிவித்து   விட்டது.