பொகா சட்டம்மீதான நீதிமன்றத் தீர்ப்புக்கு சுஹாகாம் பாராட்டு

sukaham1959  ஆம்  ஆண்டு  குற்றச்செயல்  தடுப்புச்   சட்ட(பொகா)த்தின்கீழ்     ஒருவரைத்     தடுத்து  வைப்பதற்கு    உரிய   நடைமுறைகள்   பின்பற்றப்பட    வேண்டும்    என்ற   நீதிமன்றத்    தீர்ப்பை   மலேசிய   மனித   உரிமை    ஆணையம் (சுஹாகாம்)  பாராட்டியுள்ளது.

அச்சட்டத்தின்கீழ்     மைவாட்ச்       தலைவர்     ஆர்.ஸ்ரீசஞ்சீவன்   தடுத்து  வைக்கப்பட்டது    செல்லாது     என்று    செவ்வாய்க்கிழமை   கோலாலும்பூர்    உயர்   நீதிமன்றம்   தீர்ப்பளித்தது    பற்றிக்  கருத்துரைத்தபோது    அது   இவ்வாறு   பாராட்டியது.

“பொகாவின்கீழ்    தடுத்து   வைப்பதற்கு  உரிய    நடைமுறைகள்   பின்பற்ற   வேண்டும்    என்று     கூறிய    நீதித்துறைக்கு  ஆணையத்தின்    பாராட்டு”,  என   சுஹாகாம்   தலைவர்   ரசாலி     இப்ராகிம்    கூறினார்.

பொகா  ,  ஒருவரை    விசாரணையின்றித்    தடுத்து    வைக்க   இடமளிக்கிறது,     வழக்குரைஞர்   வைத்துக்கொள்ளும்      ஒருவரின்  உரிமையையும்   மறுக்கிறது   என்று   கூறிய   ரசாலி,   இது   அனைத்துலக    அளவில்   ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்    மனித  உரிமைகளுக்கு    எதிரானதாகும்   என்றார்.

குற்றங்களைத்   தடுக்கவும்    குற்றவாளிகளை   நீதிமன்றத்தில்    நிறுத்தவும்   கடும்  சட்டங்கள்   தேவைதான்    என்றாலும்    சட்டங்கள்   தவறாக  பயன்படுத்துவதைத்   தவிர்க்க    தக்க    பாதுகாப்பும்    தேவை
என்றாரவர்.