கேஜே: ‘டான்ஸ்ரீ மூவர்’மீதான போலீஸ் புகாருக்கும் அம்னோ இளைஞர் பகுதிக்கும் தொடர்பில்லை

kjஅம்னோ  இளைஞர்  பகுதி    துணைத்   தலைவர்   கைருல்   அஸ்வான்   ஹருன்   பிரதமரைக்  கவிழ்க்கும்   முயற்சி   என்று   கூறிக்கொண்டு   அதன்  தொடர்பில்   செய்த   போலீஸ்   புகாருக்கும்    கட்சிக்கும்   சம்பந்தமில்லை  என்று  அம்னோ   இளைஞர்    தலைவர்    கைரி   ஜமாலுடின்   கூறினார்.

அது   கைருல்   அஸ்வான்    தனிப்பட்ட    முறையில்  செய்த   போலீஸ்   புகார்     என்று  கூறிய  கைரி,      அது   அம்னோ   இளைஞர்  பகுதியின்  நிலைப்பாடு   அல்ல  என்றார்.

“அதன்மீது   விசாரணை   நடத்தும்   பொறுப்பை   போலீசிடமே   விட்டு  விடுகிறோம்.  பிரதமரே  கூறியதுபோல்   அது  தனிப்பட்ட   முறையில்  செய்யப்பட்ட   போலீஸ்   புகார்”,  என  கைரி   செய்தியாளர்களிடம்    தெரிவித்ததாக    அறிவிக்கப்பட்டுள்ளது.