சமூக வலைத்தளங்களில் மகாதிர் ‘கிள்ளிங்’ என்று கூறும் காணொளி

drmமுன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்      “கிள்ளிங்”  என்று  கூறுவதைக்  காண்பிக்கும்   காணொளி  ஒன்று    சமூக   வலைத்தளங்களில்   குறிப்பாக    வாட்ஸ்எப்பில்   வேகமாக   பரவி   வருகிறது.

மஇகாவின்    70ஆம்  ஆண்டுநிறைவு  விருந்து  இன்றிரவு   நடைபெறவுள்ள   வேளையில்  அக்காணொளி   வெளிவந்துள்ளது.  அதை   அக்கட்சி    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கைத்    தற்காத்துப்   பேச    ஓர்   ஆயுதமாக   பயன்படுத்திக்கொள்ளக்  கூடும்.

அக்காணொளி,  மே  மாதம்   லங்காவியில்  ‘மலேசியாவைப்  பாதுகாப்போம்’   இயக்கத்தின்  நிகழ்ச்சி  ஒன்றின்போது    பதிவு   செய்யப்பட்டதாக     தெரிகிறது.

அதில்  கலந்துகொண்டு   பேசிய  மகாதிர்  ஐஎஸ்  தீவிரவாதிகளை  ஒடுக்க    நஜிப்    மேற்கொள்ளும்    நடவடிக்கைகளைக்   கேலி  செய்தபோது  “கிள்ளிங்”   என்ற  சொல்லைப்  பயன்படுத்தியுள்ளார்.