Brickfields -இல் ‘காட்டுப் பெருமாள் – சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல் வெளியீடு

kaaddu perumal

மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் – சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது; காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டே, இவர் தோட்டத் தொழிலாளர்களைப் போராட்டத்திற்கு ஒருங்கிணைத்தார். சுங்கை சிப்புட் வட்டாரத்தில், மலாயா தேசிய விடுதலை இராணுவத்தில் 5-வது ரெஜிமெண்டின் 32-வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். ஆட்சியாளர்களால் இவர் வேட்டையாடப்பட்டாலும், தோட்டப்புற மக்களால் இன்றும் மதிக்கத்தக்கத் தலைவராக இருக்கிறார்.

தோட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியத் தோழர் காட்டுப் பெருமாள் அவர்களின் செய்தி தொகுப்பு நூல் கீழ்க்கண்ட விபரப்படி நடைபெறவுள்ளது:-

 நாள்   :- 20.08.2016 (சனிக்கிழமை) 

நேரம்  :- மாலை மணி 5

இடம்  :-  சுபாஸ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மண்டபம். 

                  17th Floor. Menara Sentral Vista, 150 Jalan Sultan Abdul Samad, Brickfields,

                  Kuala Lumpur.

வரலாற்றுப் பதிவுகளில் மறைக்கப்பட்ட, இன்றைய தலைமுறையால் மறக்கப்பட்ட ஒரு போராட்டவாதியின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேல் விபரங்களுக்கு தோழர் நாகேன் அவர்களை 016-5910564 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள்லாம். 

நன்றி

ச. நாகேந்திரன்

மலேசிய சோசியலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்