அனந்தி சசிதரனின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது!

Ananthy Sasitharan leadஅனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகள் அக்கட்சியால் பறிக்கப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சி மகளீர் அணி தலைவி பதவியும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரனின் பதவியும் தம்மால் பறிக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சி அறவித்துள்ள தகவல் நேற்று வெளியாகியுள்ளது.

அத்துடன் அவர்களை 3ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பது எனவும் அக்கட்சி தீர்மானித்துள்ளது. அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவான போக்குக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக வடமாகாணசபையில் எழுந்துள்ள வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாக வட மாகாண சபையில் தற்போது பதவியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் தீர்மானம் கடந்த வடமாகாணசபை அமர்வின்போது கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக வவுனியாவில் 14.08.2016 அன்று இடம்பெற்ற மத்தியக்குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் இதற்கு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம்

ananthi 2வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், அபிவிருத்திகளையும் சீர்குலைக்கும் நோக்கில் முதலமைச்சரது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும், இதனைச் சீர்செய்யும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம்  அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக இந்த மத்தியக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அது முதலமைச்சரின் அரசியல் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வடமாகாண சபையிலே கொண்டுவரப்படவிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவையின் பின்னின்று வடக்கு முதல்வர் செயற்படுவதானது அவர் தனக்குத்தானே குழிவெட்டும் செயற்பாடாகவே அமையும் எனலாம். ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்’ செயற்பாட்டை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்திருப்பது அவரின் இயலாமையை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிவகரன், அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் 03 வருடங்கள் உறுப்பினர்களாகச் செயற்பட தமிழரசுக்கட்சி அனுமதி

ananthi 1இன்றைய தினம் (14.08.2016) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது ஏற்கனவே கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தன்னிச்சையாகச் செயற்பட்டதாகக் கூறப்பட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பதவி சிவகரனிடமிருந்து பறிக்கப்பட்டு 03வருடங்களுக்கு எவ்வித பதவிகளும் இன்றி அவர் உறுப்பினராகச் செயற்பட தமிழரசுக்கட்சியினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுக்கும் 03வருடங்கள் உறுப்பினராகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் இவர்களுடைய செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு, இவர்கள் கட்சியோடு இணைந்து செயற்படாதுவிடில் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: http://www.thinappuyalnews.com/archives/74750