போராளிகள் விச ஊசி விவகாரம் சென்னையில் மாபெரும் கருத்தரங்கு!

parani

 

‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த மாபெரும் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்க முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தமிழக மற்றும் இந்திய அரசின் கவனங்களுக்கு கொண்டுசெல்லப்படுவது மட்டுமல்ல அனைத்துலக கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் வகையில் இக் கருத்தரங்கை அறிவாயுதம் குழுவினர் ஒழுங்கமைத்திருக்கிறார்கள்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன், அணு உலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார் உட்பட பல முக்கிய ஆளுமைகள் உரையாற்றவுள்ளார்கள்.

புலத்திலிருந்து பெண்ணிய உளவியலாளரும் இனஅழிப்பு மற்றும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த பின் கற்கை ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனியின் அறிமுக உரையுடன் இக் கருத்தரங்கு ஆரம்பமாகவுள்ளது.

கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பேராளிகளை காக்கும் பொறிமுறைகளை உருவாக்குவது மட்டுமல்ல நடக்கும் இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அறைகூவல் விடுக்கிறார்கள்.

-http://senpakam.org