நஸ்ரி: உங்கள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்ய விடுவீர்களா?

nazriகோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற(டிபிகேஎல்)த்தின்   உரிமையை  மதிக்க    வேண்டும்   என்பதை   வலியுறுத்திய   சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்,  “நான்   உங்கள்  வீட்டில்  ஆர்ப்பாட்டம்  செய்ய  விரும்பினால்,  அனுமதிப்பிர்களா?”  என்று   வினவினார்.

‘தங்காப் எம்ஓ1’  பேரணி  ஏற்பாட்டாளர்கள்   டட்டாரான்  மெர்டேகாவில்   பேரணி   நடத்த    விரும்புவது   குறித்து    நஸ்ரி    கருத்துரைத்தார்.

பேரணி    ஏற்பாட்டாளர்கள்    மெர்டேகா  சதுக்கத்தில்   பேரணிகளுக்கு   இடமளிப்பதில்லை   என்ற   டிபிகேஎல்-இன்   முடிவை  மதிக்க   வேண்டும்.

“போலீசிடம்  அனுமதி   கேளுங்கள்.   சட்டம் (அமைதிப்  பேரணிச்  சட்டம்)  இருக்கிறது.  போலீஸ்  அனுமதிக்க  முடியாது  என்று  சொல்லிவிட்டால்   நடத்த   முடியாது.  இடத்துக்குச்  சொந்தக்காரர்களின்    அனுமதியையும்  பெற  வேண்டும்.

“டட்டாரான்  மெர்டேகா  டிபிகேஎல்லுக்குச்  சொந்தமானது.  அது  முடியாது   என்று  சொன்னால்,   முடியாதுதான்”,  என   நஸ்ரி    புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.