அரசாங்கம் பெர்சேயிடம் இழப்பீடு கோர முடியாது: முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

courtபெர்சே  3  பேரணியின்போது   ஏற்பட்டதாகக்  கூறப்படும்   சேதங்களுக்காக  அரசாங்கமும்    போலீசும்   2012  அமைதிப்  பேரணிச்  சட்ட(பிஏஏ)த்தின்கீழ்  இழப்பீடு  கோர  முடியாது  என்பதை   மேல்முறையீட்டு  நீதிமன்றம்    இன்று   உறுதிப்படுத்தியது.

இழப்பீடு  கோர  முடியாது   என்பது   ஏற்கனவே    கோலாலும்பூர்   உயர்நீதி  மன்றம்   அளித்த    தீர்ப்புதான்.  அந்தத்  தீர்ப்பை  நிலைநிறுத்திய   முறையீட்டு  நீதிமன்றத்தின்   மூவரடங்கிய   நீதிபதிகள்  குழு,   அப்போதைய   பெர்சே  இணைத்   தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்  உள்பட   பெர்சே   இயக்கக்  குழுவுக்கு   எதிராக    போலீசும்  அரசாங்கமும்   செய்திருந்த   மேல்முறையீட்டைத்  தள்ளுபடி   செய்தது.

முறையீட்டைத்  தள்ளுபடி   செய்வதென்பது     நீதிபதிகள்  மூவரும்   ஏகமனதாக   எடுத்த   முடிவாகும்.   நீதிபதி   ரொஹானா  யூசுப்   இழப்பீடு  கோருவதற்கு  அமைதிப்  பேரணிச்   சட்டத்தைப்  பயன்படுத்த  முடியாது  என்று   கூறினார்.

நீதிபதி  ரொஹானாவுடன்   நீதிபதி   வர்கீஸ்   ஜார்ஜ்  வர்கீஸ்,  நீதிபதி   மேரி  லிம்   ஆகியோரும்    மேல்முறையீட்டை   விசாரித்தனர்.