பாலியல் தாக்குதலுக்காக ரிம616,000 கோரி எம்ஏஎஸ்மீது வழக்கு

mas ஆஸ்திரேலிய  பெண்  ஒருவர்,  பாரிஸ்  நோக்கிப்   பறந்து  கொண்டிருந்த   விமானத்தில்   தலைமை  விமானப்  பணியாளர்   தம்மிடம்  தவறாக    நடந்துகொள்ள  முயன்றதாகக்  குற்றம்   சாட்டி   மலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ்) த்துக்கு   எதிராக  ஆ$200,000(ரிம616,000)   இழப்பீடு  கோரி    வழக்கு   தொடுத்துள்ளார்.

லாரா  புஷ்னி,28,    2014  ஆகஸ்ட்  4-இல்,   கோலாலும்பூரிலிருந்து   பாரிசுக்குப்  பயணம்   சென்று  கொண்டிருந்தபோது     அச்சம்பவம்   நிகழ்ந்துள்ளது.

அவர்மீது   பாலியல்  தாக்குதல்   நடத்தியதாகக்  குற்றம்   சாட்டப்பட்ட   விமானத்தின்   தலைமைப்  பணியாளர்  முகம்மட்  ரோஸ்லி   அப்   கரிம்,  பாரிஸ்     அதிகாரிகளிடம்   குற்றத்தை  ஒப்புக்  கொண்டதை  அடுத்து   கைதாகி   பிறகு   பிணையில்   விடுவிக்கப்பட்டார்.  அவர்   இப்போது  பாரிசில்   நீதிமன்ற  விசாரணையை  எதிர்நோக்குவதாக  news.com.au   தெரிவித்தது.