TangkapMO1 பேரணியில் அரசியல்வாதிகள் கை மேலோங்க இடமளிக்கப்படாது

rallyஆகஸ்ட்     27-இல்   தங்காப்எம்ஓ1  பேரணிக்கு  ஏற்பாடு  செய்துள்ள    மாணவர்   கூட்டணி   தங்களுக்கு   ஆதரவளிக்கும்     அரசியல்   கட்சிகளின்   கை  பேரணியில்  மேலோங்காதிருப்பதை   உறுதி   செய்ய  தக்க   நடவடிக்கைகளை   எடுத்துக்  கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள்   ஒன்றுசேரும்  இடமான  டட்டாரான்  மெர்டேகா  வந்தடைந்ததும்   எல்லாமே  மாணவர்களின்   திட்டப்படிதான்  நடக்கும்  என   TangkapMO1  பேரணி  பேச்சாளர்  அனிஸ்  ஷியாபிக்   முகம்மட்  யூசுப்   கூறினார்.

“டட்டாரானில்   மாணவர்கள்  மட்டுமே   பேச  அனுமதிக்கப்படுவார்கள்”,  என்று     கோலாலும்பூரில்   செய்தியாளர்   கூட்டத்தில்     அவர்   கூறினார்.

“அரசியல்வாதிகளும்  என்ஜிஓ   தலைவர்களும்   சோகோவிலும்   மஸ்ஜித்   ஜாமெக்கிலும்    மட்டும்   பேசலாம்   என்று  கூறியிருக்கிறோம்”,  என்றாரவர்.

கோலாலும்பூர்    மாநகராட்சி  மன்றம்(டிபிகேஎல்)   மறுப்பு   தெரிவித்திருந்தாலும்  மாணவர்கள்   டட்டாரான்  மெர்டேகாவில்   பேரணி   நடத்துவது    உறுதி    என்று   அனிஸ்  ஷியாபிக்    கூறினார்.

இதனிடையே   ஏற்பாட்டாளர்கள்  டிபிகேஎல்-இன்  அனுமதியைப்  பெற்றாலொழிய    பேரணியை   டட்டாரான்  மெர்டேகாவில்    நடத்த  அனுமதிக்க    முடியாது   எனப்   போலீஸ்  படைத்   தலைவர்   காலிட்   அபு  பக்கார்    கூறியுள்ளார்.

நாட்டின்  பல  பகுதிகளிலிருந்தும்  சுமார்   1,500   மாணவர்கள்   பேரணியில்  கலந்துகொள்ளக்கூடும்  என   ஏற்பாட்டாளர்கள்   எதிர்பார்க்கின்றனர்.