இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 அதிகரிப்பு!

மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 120 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ரென்ஜி தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அக்கும்மொலியின் மேயரின் தகவலின்படி, ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் தூங்க பயந்து கொண்டு வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

-http://www.tamilwin.com