டான்ஸ்ரீகள் மூவரும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும்: அம்னோ மகளிர் வலியுறுத்து

tansriமுன்னாள்   உயர்  அரசு  அதிகாரிகள்  மூவரும்,  அவர்கள்     காட்டிக்  கொடுக்கப்பட்டார்கள்  என   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்     கூறுவதைக்  கேட்டுக்கொண்டு   அமைதியாக  இருக்கக்  கூடாது   என  அம்னோ  மகளிர்  பகுதி   தகவல்  தலைவர்   ரோஸ்னி  ஸகாரி  கூறினார்.

பேங்க்  நெகாரா  முன்னாள்  ஆளுனர்  ஸெட்டி  அஹ்தார்  அசிஸ்,  முன்னாள்   சட்டத்துறைத்   தலைவர்   அப்துல்  கனி  பட்டேல்,  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணைய   முன்னாள்   தலைவர்   அபு  காசிம்   முகம்மட்  மூவரும்   காட்டிக்கொடுக்கப்படாதிருந்தால்    பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இந்நேரம்   நீதிமன்றத்தில்   நிறுத்தப்பட்டிருப்பார்  என   மகாதிர்   கூறியிருந்தார்.

அம்மூவரும்  இன்னொரு  உயர்  அரசு  அதிகாரியால்-  அவரும்  ஒரு  டான்ஸ்ரீதான் –   காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்   என  மகாதிர்    கூறினார்.

“அது  உண்மை  அல்ல   என்றால்  அம்மூவரும்  முன்வந்து    அதை  மறுத்து   சத்திய  பிரமாணம்   செய்ய   வேண்டும் .

“அவர்களை    வெறுக்கத்தக்க   ஒரு  குற்றச்செயலுடன்  தொடர்புப்படுத்தி   அவர்களின்  நற்பெயருக்கும்   அருமையான  சேவைக்கும்  களங்கம்  கற்பிக்க  முயலும்    மகாதிருக்கு  எதிராக  அவர்கள்   சட்ட   நடவடிக்கையும்  எடுக்க   வேண்டும்”,  என  ரோஸ்னி  ஓர்   அறிக்கையில்   கூறினார்.